Cricket news in tamil: 2020ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு மண்ணில் அரங்கேறிய நிலையில், 2022ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. மேலும், 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா உள்பட 12 அணிகள் நேரடியாக குரூப் சுற்றுக்கு தகுதி சுற்றில் மோதுகின்றன. மற்ற 4 அணிகள் தகுதிச்சுற்று அடிப்படையில் வெற்றிபெற்று குரூப் சுற்றுக்குள் நுழையும்.
தேதி மற்றும் அட்டவணை
ஐசிசி வெளியிட்டுள்ள அட்டவணையின் படி, டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுக்குள் நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. பின்னர், அக்டோபர் 22-ம் தேதி (சனிக்கிழமை) முதல் லீக் சுற்றுப்போட்டிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகின்றன. இந்த லீக் சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது.
இந்தியா அதன் முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23-ல் மெல்பெர்ன் நகரில் உள்ள எம்சிஜி மைதானத்தில் அரங்கேறுகிறது.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை மெல்பெர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை போட்டிகள் - எந்தெந்த மைதானங்கள்
2022ம் ஆண்டுகான டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 45 போட்டிகள், 29 நாட்கள் நடைபெறுகின்றன. மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் உள்ள 7 நகரங்களின் மைதாங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அதன்படி, அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்பேர்ன், பெர்த், சிட்னி, ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்திலும், அரையிறுதி போட்டிகள் சிட்னி, அடிலெய்ட், ஓவல் மைதானங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா எந்தெந்த அணிகளுடன் மோதுகிறது?
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள குரூப் - 2-வில் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா வங்கதேசம் போன்ற அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில்,
அக்டோபர் 23: இந்தியா vs பாகிஸ்தான்
அக்டோபர் 27: இந்தியா vs க்ரூப் சுற்றில் தேர்வான அணி
அக்டோபர் 30: இந்தியா vs தென்னாப்பிரிக்கா
நவம்பர் 2: இந்தியா vs வங்கதேசம்
நவம்பர் 6: இந்தியா vs க்ரூப் சுற்றில் தேர்வான அணி, ஆகிய அணிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் இந்திய அணி களமிறங்குகிறது.
Mark your 🗓️, set your ⏰ & get set to support #TeamIndia at the ICC Men's #T20WorldCup 2022! 🥳
Give us a 🙌 if you #BelieveInBlue to bring the 🏆 home!
Starts Oct 16 | Star Sports & Disney+Hotstar#T20WC #T20WorldCup2022 pic.twitter.com/654Amcjf2b— Star Sports (@StarSportsIndia) January 21, 2022
தகுதிச் சுற்றில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?
கடந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோல்வி கண்டது. இதனால், அரையிறுதிக்கு தகுதி பெறாத இந்தியா சோகத்துடன் தாயகம் திரும்பியது. ஆனால். இம்முறை இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மேலும், முதல் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும் பட்சத்தில் மற்ற அணிகளை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.