Cricket news in tamil: இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டி கொழும்பின் பிரமதாச ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச முடிவு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்தது. அறிமுக வீரராக களம் கண்ட துவக்க வீரர் ப்ரித்வி ஷா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து (கோல்டன் டக் அவுட்) வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் மறுமுனையில் இருந்த கேப்டன் தவானுடன் ஜோடி சேர்ந்தார். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் 6.1 ஓவரில் ஆட்டமிழந்தார் சஞ்சு (27ரன்). அணி வலுவான ரன்களை எட்ட ஒரு வலுவான கூட்டணி வேண்டும் என்பதால் தவானுடன் ஜோடி சேர களம் கண்டார் சூர்யகுமார் யாதவ்.
34 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 50 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த வீரர்கள் ஓரளவு ரன்களை குவிக்க அணி 164 என்ற டீசன்டான ரன் குவிப்பை இந்திய அணி எட்டியது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அறிமுக வீரராக களமிறங்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டை வீழ்த்தினார். 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய புவனேஷ்வர் குமாருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
4⃣/2⃣2⃣ in 3.3 overs 🔥🔥@BhuviOfficial wins the Man of the Match award for his splendid performance in the 1st #SLvIND T20I👏👏#TeamIndia pic.twitter.com/DlV3aIK4um
— BCCI (@BCCI) July 25, 2021
இந்த ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் வெற்றி குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் ஷிகர் தவான், சூர்யகுமாரின் பேட்டிங்கை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்ளவு சூப்பராக விளையாடுகிறார் என புகழாரம் சூட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், "நாங்கள் இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். துவக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்ததால் ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் அடித்தால் மீண்டும் எங்களால் நல்ல நிலைமைக்கு வர முடியும் என்று நினைத்தோம். அதன்படி சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். அவரது விளையாட்டை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் விளையாடிய விதம் அருமையாக இருந்தது. என் மீது இருந்த பிரசரை அவரது சில ரிஸ்க்கான ஷாட்டுகள் நீக்கிவிட்டன. அவர் தொடர்ந்து அற்புதமாக பேட்டிங் செய்து வருகிறார். இதேபோன்று பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார்" என்று கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.