Advertisment

சூரியகுமார் யாதவுக்கு அநியாய அவுட்: அம்பயர் இப்படி செய்யலாமா?

Suryakumar Yadav controversy tamil news: சூர்யகுமார் யாதவ் அவுட் ஆன முறை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வரும் நிலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

author-image
WebDesk
Mar 19, 2021 15:55 IST
New Update
Cricket news in tamil India vs england 4th t20 Suryakumar Yadav wicket controversy ,

Cricket news in tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது டி-20 போட்டி நேற்று வியாழக்கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்தது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. எனவே தொடர் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. இந்த போட்டியில் களமிறங்கிய அறிமுக வீரர் சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார்.

Advertisment

இந்த தொடரில் 2வது போட்டியில் பங்கேற்ற வாய்ப்பளிக்கப்பட்ட சூர்யகுமார்க்கு பேட்டிங் கிடைக்கவில்லை. தொடர்ந்து நடந்த 3வது போட்டியில் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் விளையாடிய சூரியகுமார் யாதவ், களமிறங்கிய முதல் பந்திலே சிக்ஸரை பறக்க விட்டார். அதே பாணியை தக்கவைத்துக் கொண்ட அவர், ஏ பி டி வில்லியர்ஸ் போல் 360 கோணத்தில் ஆடி சிக்கிய பந்துகளை எல்லாம் சிதறடித்தார். அதோடு களமிறங்கிய முதல் டி20 போட்டியில் அரைசதம் கடந்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பல ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக பேட்டிங் செய்த சூர்யகுமார் 31 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளை அடித்து 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மிகச் சிறப்பாக ஆடிய இவரின் அவுட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சூர்யகுமார் சாம் கர்ரன் வீசிய பந்தை தனது லெக் சைடில் தூக்கி அடிக்கவே, பந்து டேவிட் மாலன் வசம் கேட்ச் ஆகியது. ஆனால் மாலன் கையில் சிக்கிய பந்து தரையில் தொட்டுது போல் ரீப்ளேக்கள் காட்டின. மூன்றாவது நடுவர் அரைமணிநேரம் ரீப்ளே செய்து பார்த்து விட்டு, சாப்ஃட் சிக்னல் என்று கூறி அவுட் கொடுத்தார்.

இந்த அவுட் முறை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வரும் நிலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

#Sports #Cricket #Indian Cricket Team #T20 #Indvseng
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment