Advertisment

முதல் டி20 போட்டி: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

IND vs ENG T20 Series 2021 Schedule, Squad Tamil news: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி இன்று துவங்குகிறது.

author-image
WebDesk
New Update
Cricket news in tamil India vs England (IND vs ENG) T20 Series 2021 Schedule, Squad

India vs England (IND vs ENG) T20 Series 2021 Schedule, Squad: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisment

இந்தியா சுற்றுப்பயணமாக வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்த நிலையில் இன்று முதல் நடக்கவுள்ள 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டு விளையாடவுள்ளது. தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் நடந்த, மற்றும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்று அழைக்கப்படும் 'நரேந்திர மோடி' மைதானத்தில் இந்த போட்டிகள் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தனர். 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 130 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பும்ரா இல்லை

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள கோலி தலைமையிலான இந்திய அணி, டி-20 தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்கிற உற்சாகத்தில் களமிறங்க உள்ளது. தொடக்க வீரர் ரோகித் சர்மாவுடன் களமிறங்க உள்ளது தவானா அல்லது கே.எல். ராகுலா என்ற குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ள தவானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதே வேளையில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள கே.எல். ராகுலுக்கு 3, 4ம் இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். அதே போன்று ஐபிஎல் போட்டிகளில் அமர்களப்படுத்திய சூர்யா குமார் யாதவ், மற்றும் இஷான் கிஷனுக்கு மிடில்-ஆர்டரில் வாய்ப்பு வழங்கப்படலாம்.

இந்திய அணியின் பந்து வீச்சளார்களை பொறுத்தவரை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விருப்ப விடுப்பில் உள்ளார். எனவே அவருக்கு பதில், காயம் காரணமாக நீண்ட நாள் ஓய்வில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அவரின் இடத்தை நிரப்புவார். அதே போன்று காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா போட்டியில் களமிறங்க ஆயத்தமாகி உள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அசத்தலாக விளையாடிய தமிழக வீரர் நடராஜன் தோள்பட்டை ஏற்பட்டடுள்ள காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் தீபக் சாஹர் இறக்கப்படலாம்.

ரன்மழை பொழிவாரா கேப்டன் கோலி?

இங்கிலாந்து அணிக்கு ஏதிராக நடந்த டெஸ்ட் போட்டிகளில் பெரிதும் சோபிக்காத்தகாத இந்திய அணியின் கேப்டன் கோலி, டி-20 போட்டிகளில் ரன்களை சேர்ப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் அதே வேளையில் அவர் இன்னும் 72 ரன்கள் சேர்த்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற வாய்ப்புள்ளது. எனவே அவர் சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

டி-20 தரவரிசையில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி

ஐசிசி டி-20 போட்டி தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, அசுர பலம் பொருந்திய அணியாக உள்ளது. இயான் மோர்கன் தலைமையில் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணியில், முன்னணி வீரர்கள் டேவிட் மலான், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜாசன் ராய் போன்றோர் உள்ளனர். எனவே அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

அட்டவணை

1 வது டி 20 : மார்ச் 12

2 வது டி 20 : மார்ச் 14

3 வது டி 20 : மார்ச் 16

4 வது டி 20 : மார்ச் 18

5 வது டி 20 : மார்ச் 20

நேரம்

அனைத்து போட்டிகளும் இரவு 7:00 மணிக்கு துவங்கும்.

இடம்

அனைத்து போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.

இந்திய அணி விபரம்

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்ட்யா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தவதியா, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி மற்றும் ஷார்துல் தாக்கூர்.

இங்கிலாந்து அணி விபரம்

ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், டாம் குர்ரான், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, மார்க் உட்.

ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங்

இந்தியா-இங்கிலாந்து டி 20 தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறது. தவிர ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் டிஜிட்டல் தளமான ஹாட் ஸ்டாரிலும், மற்றும் ஜியோவின் ஜியோ டிவியிலும் நேரலை செய்யப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

India Vs England T20 Captain Virat Kholi Morgan Bcci Indvseng Motera Stadium
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment