இந்திய, இங்கிலாந்து அணிகளின் பந்துவீச்சு உத்தி என்ன?

Cricket Tamil news: முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

By: February 3, 2021, 9:02:10 PM

Cricket news in Tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் இந்திய அணியின் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்று வந்ததுள்ள இந்திய அணி, இப்போது சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் மிக கவனமுடன் விளையாட வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு நடந்த போட்டிகளில் 3 அல்லது
4 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு தாக்குதல் நடத்திய இந்திய அணி, சொந்த மண்ணில் சில மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்டுகின்றது. இந்திய மண்ணில் சுழலுக்கே அதிக சாதகம் இருப்பதால் 3 சுழல் பந்து வீச்சாளர்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகின்றது.

சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் பந்து அதிகமாக பவுன்ஸ்-ஆக வாய்ப்புகள் உள்ளது. 2ம் மற்றும் 3ம் நாள் ஆட்ட நேரத்தில் பேட்டிங் ஏதுவாகவும், கடைசி இரண்டு நாள் ஆட்ட நேரத்தில் சுழலுக்கு ஏதுவாகவும் இருக்கும். எனவே இந்திய அணியில் 3 சுழல் பந்து வீச்சாளர்கள் கண்டிப்பாக இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கிடைக்கும். சைனாமேன் ஸ்டைலில் பந்து வீசும் குலதீப் யாதவ், மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆக்சர் படேலுக்கு வாய்ப்பு அளிக்கப்படலம். பேட்டிங் செய்யும் சுழற் பந்து வீச்சாளர் தேவைப்பட்டால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இலங்கை அணியுடன் விளையாடி இங்கிலாந்து அணிக்கு இடது கை சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்டேனியா பின்னடைவை ஏற்படுத்தி இருந்தார். எனவே இந்த இவர்களில் யாரைத் தெரிவு செய்வது என்பதை இந்திய அணி நிர்வாகமே முடிவு செய்யும்.

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரஹானே, கேப்டன் கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோர் கண்டிப்பாக இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. நேற்று சென்னை வந்து சேர்ந்துள்ள ஹர்திக் பாண்டியவுக்கு அணியில் இடம் கிடைப்பது சற்று கடினம் தான் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேகப்பந்து வீச்சில், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆனால் காயம் காரணமாக ஓய்வில் இருந்த இஷாந்த் சர்மா அணிக்கு திரும்ப உள்ளார். நல்ல உடற்தகுதி இருந்தால் மட்டுமே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இல்லையென்றால் சிராஜ்க்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அப்படி சிராஜ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுடன் இணைந்து கலக்குவார்.

இங்கிலாந்து அணி இதுவரை டெஸ்டில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிடவில்லை. அதோடு வீரர்களை சுழல் முறையில் விளையாட வைக்கும் திட்டத்தில் உள்ளது. அந்த அணியின் வீரர்கள் சென்னை வந்து சேருவதற்கு முன் ஸ்டார் ஆல்-ரவுண்டர் பேன் ஸ்டோக்ஸ் மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் வந்து சேர்ந்தனர். எனவே இவர்கள் இருவரும் அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. சுழலுக்கு டோம் பெஸ், மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் உள்ளனர். எனவே இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்- ரவுண்டர் என்ற உத்தியையே அந்த அணி பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

 

 

 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Cricket news in tamil india vs england statics for bowling at chennai test

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X