scorecardresearch

IND vs SL 1St T20: இலங்கையை தும்சம் செய்த இந்தியா : 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

IND vs SL, 1st T20I: predicted 11, Today’s Playing XI, Pitch – players Injury Report and live score Updates in tamil: இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

India vs Sri Lanka, 1st T20I Live updates in tamil: இந்தியா சுற்றுப்பயணமாக வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் இன்றிரவு (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, இவ்விரு அணி வீரர்களும் நேற்று முதல் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்கால திட்டத்துடன் இந்தியா

இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்து ஒயிட் -வாஷ் செய்தது. மேலும், 6 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது

ரோகித்தின் இந்திய டி20 அணியின் முழுக் கவனமும், ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மீது தான் இருக்கிறது. இத்தொடருக்காக அணியை தயார்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதோடு பல்வேறு பரிசோதனை முயற்சிகளை அணி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், விராட் கோலி, ரிஷாப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்த இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பிடித்தனர். இந்த ஜோடிக்காக கேப்டன் ரோகித் தனது தொடக்க வீரர் இடத்தை விட்டுக்கொடுத்து இருந்தார். எனவே அதுபோன்று இன்றைய ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள் யார்?

தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல், மிடில் ஆடர் வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் இடத்தில் சில இளம் வீரர்களுக்கு களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் அனுபவமும், காயத்தில் இருந்து குணமடைந்து திரும்பியுள்ள ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் வருகையும் அணிக்கு சமமான பலத்தை அளிக்கும்.

ஐபிஎல் தொடர்களில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அணியில் இணைத்துள்ள நிலையில், மிடில்-ஆடரில் அவர் அணிக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கலாம். அவருடன் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை நொறுக்கிய வெங்கடேஷ் அய்யர் அணி நல்ல ஸ்கோரை எட்டிப்பிடிக்க உதவுவார் என்பதில் சந்தேகமில்லை. பந்து வீச்சில் முன்னணி வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், புவனேஷ்வர்குமார், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட வீரர்கள் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

இலங்கை அணி எப்படி?

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருந்த இலங்கை அணி 1-4 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது. எனினும், தொடரில் நடந்த கடைசி ஆட்டத்தில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உத்வேகம் கொடுத்துள்ளது. அந்த அணியில் குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா, கேப்டன் தசுன் ஷனகா ஆகிய வீரர்கள் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்‌ஷனா சுழலில் வித்தை காட்டி வருகிறார். அவரது பந்துவீச்சு இந்திய அணிக்கு சற்று சவாலாக இருக்க வாய்ப்புள்ளது.

இலங்கை அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் வனித்து ஹசரங்காவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இன்னும் முழுமையாக மீளாததால் அவருக்கு தனிமைப்படுத்துதல் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்க வாய்ப்பில்லை. இது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நேற்று நடந்த நேர்காணலில், டாப் வரிசையில் உள்ள பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை அணியின் கேப்டன் ஷனகா, “தொடக்க வீரர்கள் ரன்கள் குவிக்கும் போது, நாங்கள் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. அணியில் ஹசரங்கா இல்லாதது பின்னடைவு தான். ஆனாலும் நாங்கள் வலுவாகவே இருக்கிறோம். இளம் வீரர்களிடம் மிகச்சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.

நேருக்கு நேர்…

இந்தியா – இலங்கை அணிகள் தற்போதுவரை 22 டி20 போட்டிகளில் நேருக்கு நேராக சந்தித்துள்ளன. இதில் இந்திய அணி 14 போட்டிகளிலும், இலங்கை அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

லக்னோ மைதானம் எப்படி?

லக்னோவில் இரவு நேரத்தில் அதிகம் பனிப்பொழிவு இருக்கும். இதன் காரணமாக பந்து வீச சற்று கடினமாக இருக்கும். இதனால் ‘டாஸ்’ வெல்லும் அணி முதலில் பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.

இந்த டி20 தொடரை பொறுத்தவரை, சொந்த மண்ணில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும். அயல்நாட்டு மண்ணில் நடக்கும் தொடர்களில் பெரும் பின்னடைவை சந்தித்து வரும் இலங்கை அணி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

டாஸ் வென்ற இலங்கை அணி

இரவு7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா இஷான் கிஷான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். இந்திய அணியில் தீபக் ஷூடா அறிமுக வீரராக களமிறங்கியுள்ள நிலையில், கடந்த தொடரில் விளையாடாத பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

முதலில் களமிங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அசத்தியது. குறிப்பாக கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சரியாக ரன் குவிக்காத விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் இந்த போட்டியில் வழக்கமான தனது தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்டோர் மளமளவென உயர்ந்தது. முதல் 6 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்தது.

இஷான் கிஷான் – ஸ்ரோயாஸ் அய்யர் அபாரம்

தொடர்ந்து இவர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில்,  இஷான் கிஷான் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஸ்கோர் 11.5 ஓவர்களில் 111 ரன்களை கடந்த போது கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் இஷான் கிஷானுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அசத்தாக விளையாடி ரன்கள் குவித்த இஷான் கிஷான் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 89 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 56 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்து 11 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இதன்பிறகு களமிறங்கிய ஜடேஜா ஸ்ரேயாஷட அய்யருடன் ஜோடி சேர்ந்தார்.

இதில் கடைசி ஓவரை எதிர்கொண்ட ஸ்ரோயாஸ் அய்யர் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. கடைசி வரை களத்தில் இருந்த ஸ்ரோயாஸ் அய்யர் 28 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ருடன் 57 ரன்களும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. புவனேஷ்வர்குமார் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை எதிர்கொண்ட நிஷங்கா போல்ட் ஆகி அதிர்ச்சியளித்தா. தொடர்ந்து களமிறங்கிய மகிரா 13 ரன்களிலும், லியானேஜ் 11 ரன்களிலும், சண்டிமால் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி வெற்றி

ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் தனி ஆளாக போராடிய அசலங்கா அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கருணரத்னே 21 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முழுமையான ஆடிய இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 47 பந்துகளை சந்தித்த அசலங்கா 5 பவுண்டரியுடன்  53 ரன்களும் சமீரா 24 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில், புவனேஷ்வர், மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாஹல், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து 2-வது டி20 போட்டி நாளை மறுநாள் தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது.

Sri Lanka in India, 3 T20I Series, 2022Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow   16 August 2022

India 199/2 (20.0)

vs

Sri Lanka   137/6 (20.0)

Match Ended ( Day – 1st T20I ) India beat Sri Lanka by 62 runs

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil india vs sri lanka 1st t20i live updates in tamil