Cricket news in tamil: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பிரபலமானவர்கள் பந்துவீச்சாளர்கள். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் இவர்கள், பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுப்பது முதல் அவர்களை ரன்கள் அடிக்காமல் தடுப்பது, சரியான நேரத்தில் விக்கெட்டுகளை சாய்ப்பது வரை அவர்களின் கடமை நீளுகிறது. மேலும், வைடு, நோ-பால் என வீசி ரன்களை வாரிக்கொடுக்காமல் இருப்பதும் அவர்களின் தலையாய கடமையாக பார்க்கப்படுகிறது.
ஆனால், வைடு, நோ-பால்களை வீசாமல் தொடர்ந்து பந்துகளை வீசுவது ஒரு கட்டத்தில் அவர்களுக்கே வெறுப்பாக இருக்கும். இதனால், ஃபீல்டிங் செய்யும் அவர்களின் அணி சில பின்னடைவுகளை சந்திக்க நேரும். அதுவே சர்வதேச போட்டி என்றால் அழுத்தம் இன்னுமே அதிகரிக்கும்.
ஒரு நோ-பால் கூட வீசாத இந்திய சாம்பியன் வீரர்
எனினும், சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில், ஒரு நோ-பால் கூட வீசாமல் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை நகர்த்திய வீரர்களும் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட்டின் முன்னோடியாக திகழும் ஜாம்பவான் வீரர் 'கபில் தேவ்' -வும் ஒருவராக இருக்கிறார். அவரது 18 ஆண்டுகால பந்துவீச்சு வாழ்க்கையில் அவர் ஒருமுறை கூட நோ-பால் வீசியது கிடையாதாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவர் என்று வர்ணிக்கப்படும் ஆல்-ரவுண்டர் வீரர் கபில்தேவ் 131 டெஸ்ட் மற்றும் 225 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இரண்டு ஃபார்மெட்டுகளிலும் சேர்த்து மொத்தமாக 687 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் அவர் ஒருமுறை கூட நோ-பால் வீசாத இந்திய வீரர் என்கிற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார்.
1983 ஆம் நடந்த உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் வீரர் கபில் தேவ்வின் தலைமையிலான அணி தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு நோ-பால் கூட வீசாத மற்ற நாட்டு வீரர்கள் யார்?
இந்திய வீரர் கபில் தேவ் இடம்பிடித்துள்ள இந்த பட்டியலில் பட்டியலில் இன்னும் 4 வீரர்கள் இருக்கின்றனர். இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் இயன் போத்தம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் லான்ஸ் கிப்ஸ், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டென்னிஸ் லில்லி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஆகிய 4 வீரர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.