Cricket News In Tamil: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான, துணை கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட் நாவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உள்ள உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது. இதனால் இந்த 5 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் சிட்னியில் நடக்கும் 3 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் இந்த 5 வீரர்களும் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த 5 வீரர்களுடன் உணவு விடுதியில் இருந்த வீடியோவையும், பில்களை இணைத்த புகைப்படத்தையும் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து பி.சி.சி.ஐ - யுடன் இணைந்து விசாரிப்பதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பி.சி.சி.ஐ - யின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது:
"இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான துணை கேப்டன் ரோகித் சர்மா, சுப் மன் கில் பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட் நாவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த 5 வீரர்களும் மழை பெய்ததால் அந்த உணவகத்தில் அமர்ந்துள்ளனர். ரசிகர் ஒருவர் அவர்களின் அனுமதி இல்லமால் வீடியோ எடுத்துள்ளார். மற்றும் பில்களை இணைத்த புகைப்படத்தையும் பதிவிட்டுளார். எனவே அந்த ரசிகர் தீர விசாரிக்க பட வேண்டும்.
இந்த சர்ச்சையால் இந்திய அணி நிர்வாகம் வீரர்களை தனிமைப்படுத்தியுள்ளது. மற்றும் அவர்கள் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறையை மீறினார்களா என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறது. அணியின் விதிமுறைகளை மீறியதற்கு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிகின்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு உள்ள அறிக்கையை கவனமாக படித்தால், இது விதிமுறை மீறல் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை. எனவே இந்திய அணி வீரர்களுடன் இந்த 5 வீரரர்களும் பயணிப்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. மற்றும் இந்திய அணி வீரர்களுடன் மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு இன்று பிற்பகல் விமானத்தின் மூலம் பயணிக்கின்றனர்" என்று அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்
நிர்வாக மேலாளர் கிரிஷ் டோங்ரே
கிரிஷ் டோங்ரே பி.சி.சி.ஐ - யின் நிர்வாக மேலாளராக பணிபுரிகின்றார். இவர் தான் கோவிட் - 19 நெறிமுறைகளை வீரர்கள் சரியாக கடை பிடிக்கிறார்களா என்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் வீரர்கள் விதி முறைகளை மீறிதாக எழுந்துள்ள சர்ச்சையால், இப்போது டோங்ரேவின் தலை உருள்கின்றது.
கொரோனா பதற்றம்
4 வது டெஸ்ட் போட்டி நடவுள்ள பிரிஸ்பேனில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தயங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கும் (சிட்னி) நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநில அரசுகளுக்கு இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிட்னி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கோவிட் - 19 தொற்றுநோய் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் குயின்ஸ்லாந்து அரசு நியூ சவுத் வேல்ஸ்க்கு செல்லும் எல்லைகளை மூடியுள்ளது.