scorecardresearch

இதற்குமுன் இப்படி பார்த்தது உண்டா? 6, 7, 8, 9-வது வரிசையில் அசத்தும் ‘நம்பிக்கையான நால்வர்’

India’s new Fabulous Four cricket players tamil news: இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் நான்கு வீரர்கள் என்றால் (ஃபேப் ஃபோர்) ரிஷாப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரைக் குறிப்பிட்டு கூறி விட முடியும்.

இதற்குமுன் இப்படி பார்த்தது உண்டா? 6, 7, 8, 9-வது வரிசையில் அசத்தும் ‘நம்பிக்கையான நால்வர்’

Cricket news in tamil: இந்த நூற்றாண்டின் சிறந்த நான்கு வீரர்கள் என்று (ஃபேப் ஃபோர்) சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.எஸ். லக்ஷ்மன் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்கள். இந்த வீரர்கள் செய்த சாதனை உலக கிரிக்கெட் வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அணிகளுக்கு எதிரான தொடரில் மிக முக்கியம் வாய்ந்த மற்றும் அணிக்கு நம்பிக்கை தரும் நான்கு வீரர்கள் என்றால் (ஃபேப் ஃபோர்) ரிஷாப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகியோரைக் குறிப்பிட்டு கூறி விட முடியும்.

இவர்கள் பேட்டிங்கில் 6, 7, 8 மற்றும் 9ம் இடங்களில் பேட் செய்வர்கள். அதேவேளையில் அணியின் முழுநேர பந்துவீச்சாளர்களாக உள்ளார்கள். ஆனால் பேட்டிங்கில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர்கள் அளித்த பங்களிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதோடு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னணி பேட்ஸ்மேன்களை விட மிகச் சிறப்பாக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முன்னணி வீரர்களான சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகிய நால்வரும் 5 அரைசதங்களுடன் 636 ரன்கள் மடடுமே எடுத்திருந்தனர். ஆனால் பந்த், அஸ்வின், சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகிய நால்வரும் 695 ரன்களை எடுத்து, 5 அரைசதங்களையும், இரண்டு சதங்களையும் அணிக்காக சேர்த்திருந்தனர்.

1980 -களில் விளையாடிய கபில் தேவ், ரவி சாஸ்திரி, மதன் லால், சேதன் சர்மா, ரோஜர் பின்னி ஆகியோர் அடங்கிய அணி இதுபோன்ற சிறப்பாக விளையாடி இருந்தது. அதன்பிறகு இப்போதுதான் மிடில்-ஆடருக்கு பிறகு களமிறங்கி சிறப்பாக ஆடும் வீரர்களை இந்திய அணி பெற்றுள்ளது. இவர்களோடு ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரையும் இந்த வரிசையில் சேர்த்தால், அனைத்து பார்மெட்டுகளிலும் மிக சிறப்பான விளையாடக் கூடிய ஆல்-ரவுண்டர்களின் படையை கேப்டன் கோலி வைத்துள்ளார் என்று கூறலாம்.

ரிஷாப் பந்த்

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறுச் சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பெறுவதற்கு அடித்தளமிட்ட வீரர்களில் ஒருவர் ரிஷாப் பந்த். ஆனால் பந்த் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பேட்டிங்கில் சரியாக சோபிக்கவில்லை. எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் பந்த்தின் பெயர் இடம் பெறவில்லை. முதல் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சிகரமான தோல்வியை சந்திக்கவே, பந்த்க்கு 2வது போட்டியில் விளையாடும் வாய்ப்பு தேடி வந்தது. வந்த வாய்ப்பை விடக்கூடாது என்று ஆடிய இவர், சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 97 ரன்கள் குவித்து தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து கப்பாவில் நடந்த போட்டியின் இறுதி நாளில் 89 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அதே பார்மில் தொடர்ந்த பந்த் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 88 பந்துகளுக்கு 91 ரன்கள் சேர்த்தார். பின்னர் அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்டின் இறுதி நாளில் 118 பந்துகளுக்கு 101 ரன்கள் சேர்த்து அசத்தினார். அந்த போட்டியில் 6 விக்கெட்டுகளுக்கு பிறகு களமிறங்கிய பந்த் வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்து 113 ரன்கள் சேர்த்தார். “இந்திய மண்ணில் ஒரு இந்திய பேட்ஸ்மேனின் மிகச் சிறந்த பதிலடி இது” என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

ரவிச்சந்திர அஸ்வின்

ஆஃப்-ஸ்பின்னரான அஸ்வின் இந்தியாவின் மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களின் ஒருவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் சமீப காலமாக பேட்டிங்கிலும் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்பான 4 ஆண்டுகளில், ஒரு அரைசதம் கூட பதிவு செய்யாத அஸ்வின் 16.76 என்ற சராசரியைக் கொண்டிருந்தார். சிட்னி மற்றும் மெல்போர்னில் அவர் ஆடிய விதம், பேட்டிங்கிலும் எழுச்சி மிக்க வீரராக மாறும் அறிகுறிகள் தெளிவாகத் தென்பட்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த ஊர் மக்கள் முன்பாக விளையாடிய அஸ்வின், தனது 5 டெஸ்ட் சதத்தை பதிவு செய்து ஒரு மாஸ்டர் கிளாஸ் பேட்டிங் ஆடி இருந்தார். அஸ்வின் களமிறங்கிய போது இந்திய அணி 106 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அஸ்வின் 96 ரன்கள் எடுத்த போது மறுமுனையில் நின்ற கேப்டன் கோலி ஆட்டமிழந்தார். இருப்பினும் தனது முயற்சியை கைவிடாத அஸ்வின் சதத்தை பூர்த்தி செய்து கம்பீர நடைபோட்டார். அதேவேளையில் இந்திய அணி போட்டியை சமன் செய்யவும் வழிவகை செய்தார்.

ரவீந்திர ஜடேஜா

தனது இடது கை சுழல் பந்து வீச்சால் சோபிக்காத போது, இடது கை பேட்டிங்கால் அசத்தும் அசாத்திய வீரர் ஜடேஜா. அணி சிக்கலில் உள்ள போது அணியை மீட்டெடுக்கும் முதன்மையானவர்களில் ஜடேஜாவும் ஒருவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்திருந்தது. இந்த நிலை மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்டிலும் தொடரும் என பலர் நினைத்தனர். இங்கு நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை விட 22 ரன்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலையில் இருந்தது. ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டவும், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும் கைகொடுத்தார். அதோடு சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 121 ரன்கள் எடுத்து, இந்திய அணி 326 ரன்கள் சேர்க்க உதவியும் இருந்தது. மற்றும் பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஜடேஜா 57 ரன்கள் எடுத்து, அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஹார்டிக் பாண்ட்யா

இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹார்டிக் பாண்ட்யா, முதுகில் ஏற்பட்ட காயத்தால் கடந்த 2018 செப்டம்பர் மாதம் முதல் எந்த டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஆயினும், தான் டெஸ்ட் போட்டியிலும் சிறந்த பேட்ஸ்மேன் தான் என்று ஏற்கனவே நிருபித்திருந்தார். 2018 ஆம் ஆண்டில் ட்ரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் அவர் அடித்த 50 ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

சமீபத்தில் ஐ.பி.எல் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 போட்டிகளிலும் பாண்ட்யா நல்ல பேட்டிங் பார்மில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது. “பாண்ட்யாவின் பேட்டிங் திறனுக்கு அவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய வேண்டும்” என்று ஷேன் வார்னே கூறியிருந்தார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்று, ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே காயத்தில் இருந்து குணமாகியுள்ள பாண்ட்யா இங்கிலாந்தில் நடக்கும் போட்டியில் நிச்சயம் இடம் பெறுவார் என நம்பலாம்.

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கப்பாவில் நடந்த டெஸ்டில் அறிமுகமாகினார். டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடுவாரா என்ற குழப்பத்தில் பலரும் இருக்கையில், களமிறங்கிய முதல் இன்னிங்சிலேயே 62 ரன்கள் சேர்த்து அனைவரின் குழப்பத்தையும் நீக்கினார். இங்கு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 சேர்ந்திருந்தது. சுந்தர் ஷார்துல் தாக்கூருடன் ஜோடி சேர்ந்தபோது இந்திய அணி 186/6 என்று இருந்தது. சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர் ஜோடி 123 ரன்களை சேர்த்தது, எனவே இந்திய 33 ரன்கள் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 85 ரன்களும், அகமதாபாத்தில் ஆட்டமிழக்காமல் 96 ரன்களும் எடுத்தார்.”பேட்டிங் வரிசையில் அவர் இறங்கும் இடத்திற்கு பரிசீலிக்கப்படுவார்” என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார்.

அக்சர் படேல்

தனது முதல் தொடரிலேயே இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், இங்கிலாந்து அணியினருக்கு மாயாஜாலம் காட்டி இருந்தார். அதோடு பேட்டிங்கில் அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அக்சர் 43 ரன்களை எடுத்திருந்தார். மற்றும் சுந்தருடன் ஜோடி சேர்ந்து, 106 ரன்கள் சேர்த்திருந்தார். அதேவேலையில் இந்திய அணி 160 ரன்கள் முன்னிலை பெறவும் உதவினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil indias new fabulous four batting at 6 7 8 9