Cricket news in tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகள் தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்த போட்டியில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய க்குருனால் பாண்டியா மற்றும் பிரசித் கிருஷ்ணா இந்திய அணி அபார வெற்றி பெற முக்கிய வீரர்களாக இருந்தனர்.
கர்நாடகைவைச் சேர்ந்த பிரசித் கிருஷ்ணா தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய இவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டாஸ் வென்று களமிறங்கிய இங்கிலாந்து அணி, அதன் துவக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரை களமிறங்கியது. அந்த அணியின் பேட்டிங்கிற்கு வலு சேர்த்த இந்த ஜோடி, ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் வீசப்பட்ட பந்துகளை பதம் பார்த்தது.
இந்த முதல் 10 ஓவர்களில் 3 ஓவர்களை வீசிய பிரசித் கிருஷ்ணா 37 ரன்களை கொடுத்திருந்தார். தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் வீசிய அவர், துவக்க வீரர் ஜேசன் ராயின் விக்கெட்டை கழற்றினார். மேலும் அவர் ஆல்-ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணிக்கு தொடர் நெருக்கடி கொடுத்தார்.

பிரசித் கிருஷ்ணா முதல் 10 ஓவர்களில் வீசிய போது சற்று பதட்டமாகவே காணப்பட்டார். இங்கிலாந்து வீரர்கள் ஒரு பக்கம் அவரது பந்து வீச்சை சாதுரியமாக சமாளித்துக் கொண்டிருந்தனர். எனவே அவர்களுக்கு எதிராக புதிய யுத்தியை முயற்சிக்க முடிவெடுத்து, முதல் பவர் பிளே முடிந்த பிறகு, மிக துல்லியமாக பந்து வீச துவங்கினார். அவர் வீசிய கூடுதல் பவுன்ஸ் பேட்ஸ்மென்கள் திணறடிக்க பயனுள்ளதாக இருந்தது. மேலும் அவர் ஜேசன் ராயிக்கு வீசிய ஷார்ட் – பந்துகள் அவரின் விக்கெட்டை வீழ்த்த உதவியது. மற்றும் பென் ஸ்டோக்ஸ்க்கு அவர் வீசிய ஆப்-கட்டர் ஸ்லோயர் அவரை தடுமாற செய்தது. இப்படி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Superb bowling display by #TeamIndia 🇮🇳 after 🏴 got off to a rollicking start 💥💥
— BCCI (@BCCI) March 23, 2021
India win by 6️⃣6️⃣ runs and take a 1-0 lead in the 3-match ODI series #INDvENG @Paytm
Scorecard 👉 https://t.co/MiuL1livUt pic.twitter.com/0m58T6SdKq
க்குருனலின் அசத்தல் ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் க்குருனால் பாண்டியாவின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பாங்கு குறித்து, கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் அறிந்த ஒன்று. நேற்றைய ஆட்டத்தில் 31 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளை விளாசி 58 ரன்கள் சேர்த்திருந்தார். மேலும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டையும் சாய்த்திருந்தார்.

நேற்றைய போட்டியில் துவக்க வீரர் தாவன் மற்றும் கேப்டன் கோலி சிறப்பாக ஆடி அணிக்கு ஒரு நல்ல சேர்த்திருந்தனர். அதேவேளையில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய கே.எல்.ராகுல் நேர்த்தியாக ஆடி அரைசத்தைதை கடந்தார். அவரோடு ஜோடி சேந்த க்குருனால் பாண்டியா அணி மூன்று இலக்க ரன்களை கடக்க உதவினார். இந்த ஜோடி விளையாடிய 9.3 ஓவரில் 112 ரன்கள் சேர்த்தது.
கடந்த வாரத்தில் நடந்த டி-20 போட்டி தொடரில் பெரிதும் சோபிக்காத ராகுல், பலதரப்பட்ட விமர்ச்சனங்களுக்கு ஆளாகி இருந்தார். ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இந்த போட்டியில் மிகச் சாதுரியமாக ஆடினார். மேலும் மிடில்-ஆடரில் இருந்த விக்கெட்டுகள் சரிந்த போதும் முயற்சியை கைவிடாத அவர் க்குருனால் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து, அணி 317 ரன்களை எட்ட பெரிதும் உதவினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil