/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-39.jpg)
Cricket news in tamil: இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து 3 டி20 தொடரில் களம் கண்ட இந்திய அணி முதல் போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், அதன் பிறகு இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-8.jpg)
இந்த 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது தான். அணியின் முன்னணி வீரரான க்ருனால் பாண்டியாவுக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்படவே அவரோடு சேர்த்து 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். எனவே இந்திய அணி கடைசி 2 போட்டிகளிலும் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்களுடன் களம் இறங்கி தோல்வியை தழுவியது.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-5.jpg)
இந்திய அணி இந்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருந்தாலும், களத்தில் இந்திய வீரர்கள் தங்களின் போராட்டத்தை கடைசி வரை விடவில்லை. 2வது போட்டியில் குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி இறுதி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றது. இலங்கை அணியும் அந்த போட்டியை போராடியே வெற்றி பெற்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-41.jpg)
இதே போல் 3 வது போட்டியிலும் மிகவும் குறைவான ஸ்கோரை செய்த இலங்கை அணி இந்திய பந்து வீச்சாளர்களிடம் தடுமாறியது. இப்படி, அந்நிய மண்ணில் நெருக்கடி கொடுத்த இந்திய வீரர்களுக்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. மற்றும் இந்திய அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-40.jpg)
இந்நிலையில், இலங்கை தொடர் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இந்திய இளம் வீரர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், "இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக அவர் உட்பட 9 வீரர்கள் அணியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்திய அணி இந்த தொடரை பாதியிலேயே முடித்துக் கொள்ளாமல் முழுத் தொடரையும் சந்தித்து விளையாடியிருக்கிறது. இந்திய அணியின் இந்த போராட்ட குணம் பாராட்டக்கூடிய ஒன்று.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-26.jpg)
இந்திய அணி நினைத்திருந்தால் இந்த தொடரே வேண்டாமென்று விலகி இருக்கலாம். ஆனால் இருக்கும் வீரர்களை வைத்து கடுமையாக போராடி தோல்வி அடைந்தது. தோல்வியைக் கண்டு பயப்படாத அணியாக தற்போதுள்ள இந்திய அணி உள்ளது பாராட்டுக்குரியது. தோல்வியை கண்டு பயம் இல்லாமல் விளையாடினாலே வெற்றி நமக்கு வந்து சேரும்" என்று கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.