Cricket news in Tamil: இந்தாண்டு நடக்கவுள்ள ஐபில் போட்டிகளில் பங்கு பெரும் வீரர்களுக்கான ஏலம், வரும் 18-ம் தேதி மாலை 3 மணி அளவில் நடக்க இருப்பதாக ஐபில் போட்டிகளை நடத்தும் நிர்வாகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஏலத்திற்காக இதுவரை 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ள வீரர்களில் 814 பேர் இந்திய வீரர்கள், 56 பேர் மேற்கிந்திய தீவுகள், 42 பேர் ஆஸ்திரேலியா வீரர்கள், 38 பேர் தென்னாப்பிரிக்க வீரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஊழலில் சிக்கி ஐ.சி.சி யால் இடைநீக்கம் செய்யப்பட்ட பங்களா தேஷ் ஆல்- ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், மிக உயர்ந்த அடிப்படை விலையான ரூ .2 கோடியில் பட்டியலிடப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட திரும்பி உள்ள ஸ்ரீசாந்த், கேரளாவுக்கான சையத் முஷ்டாக் அலி டி 20 போட்டிகளில் இடம்பெற்றதன் மூலம் தனது அடிப்படை விலையை ரூ .75 லட்சம் என்று நிர்ணயித்துள்ளார்.
ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், மார்க் வூட், லியாம் பிளங்கெட் மற்றும் கொலின் இங்க்ராம் போன்ற வீரர்கள் தங்களின் அடிப்படை விலையை ரூ .2 கோடியாக நிர்ணயித்து உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற முக்கிய பங்கு ஆற்றிய ஹனுமா விஹாரி (ரூ. 1 கோடி) மற்றும் சேதேஸ்வர் புஜாரா (ரூ .50 லட்சம்) ஆகியோரும் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
உலகின் தற்போதைய நம்பர் ஒன் டி 20 பேட்ஸ்மேனாக வலம் வரும், இங்கிலாந்தின் டேவிட் மாலன் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாக உள்ளார். எனவே அவர் இந்த ஏலத்திற்கு ரூ .1.5 கோடியை அடிப்படை விலையாக பதிவு செய்துள்ளார்.
அலெக்ஸ் கேரி, டாம் குர்ரான், மிட்செல் ஸ்வெப்சன், நாதன் கூல்டர்-நைல், முஜீப் உர் ரஹ்மான், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜெய் ரிச்சர்ட்சன், அடில் ரஷீத், டேவிட் வில்லி, ஆடம் லித் மற்றும் லூயிஸ் கிரிகோரி போன்ற வீரர்கள் ஏற்கனேவே இருந்த அதே விலையில் பதிவு செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
ஐபில் போட்டிகளில் விளையாட பதிவு செய்ய வேண்டிய காலக்கெடு கடந்த வியாழக்கிழமையோடு முடிவுற்றது. இந்நிலையில் ஒவ்வொரு அணியின் உரிமையாளரும் தங்கள் அணியில் அதிகபட்சம் 25 வீரர்களைக் கொண்டிருக்கலாம். ஏலத்தில் 61 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில் 22 வீரர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கலாம்" என்று ஐபில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஏலத்திற்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (53.20 கோடி) மிகப் பெரிய தொகையை கையில் வைத்துள்ளது. அதே வேளையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12.9 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22.90 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 34.85 கோடியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 15.35 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணி 15.35 கோடியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தால 10.75 கோடியும் கையில் வைத்துள்ளன.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஐபில் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபில் போட்டிகள் இந்தியாவில் விளையாட வாய்ப்புள்ளது.
ஐபில் போட்டிகளில் விளையாட பதிவு செய்துள்ள 283 வெளி நாட்டு வீரர்களின் பட்டியல் அவர்களின் நாடு வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் (30), ஆஸ்திரேலியா (42), பங்களாதேஷ் (5), இங்கிலாந்து (21), அயர்லாந்து (2), நேபாளம் (8), நெதர்லாந்து (1), நியூசிலாந்து ( 29), ஸ்காட்லாந்து (7), தென்னாப்பிரிக்கா (38), இலங்கை (31), ஐக்கிய அரபு அமீரகம் (9), அமெரிக்கா (2), மேற்கிந்திய தீவுகள் (56), ஜிம்பாப்வே (2).
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.