Cricket news in tamil – IPL 2021 Auction: 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் 8 அணிகளின் நிர்வாக குழுவினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் தென்னாப்பிரிக்க அணியின் ஆல்–ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், வரலாறு காணாத விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்.
இந்த ஏலத்தில் சில முக்கிய வீரர்கள் விலை போகவில்லை. அவர்களின் பட்டியல் பின்னவருமாறு:
ஆரோன் பிஞ்ச்
ஆஸ்திரேலிய டி-20 அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிக்காக விளையாடி இருந்தார். அந்த அணி வெளியிட்ட தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய பிஞ்ச் 268 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்திருந்தார்.
ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டரில் விளையாடி வரும் பிஞ்ச், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்க்க தடுமாறுகிறார். இதுவரை 314 டி-20 போட்டிகளில் விளையாடிவுள்ள பிஞ்ச் 9,251 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
அலெக்ஸ் ஹேல்ஸ்
இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுள் ஒருவராக அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளார். பிக் பாஷ் லீக்கில் மிக சுறுசுறுப்புடன் விளையாடியதால் இவரின் மீது உரிமையாளர்களின் பார்வை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் விற்கப்படாமல் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடிய இவரின் சராசரி 38.79 புள்ளியாகவும், ஸ்ட்ரைக் ரேட் 161.61 புள்ளியாகவும் இருந்தது. ஹேல்ஸ் தனது ஆஃப்–ஃபீல்ட் நடத்தைக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது.
ஹேல்ஸைப் போலவே, அவரது நண்பரும், அதிரடி தொடக்க ஆட்டக்காரரும் ஆனா ‘ஜேசன் ராயும்‘ விற்கப்படாமல் போனார்.
சாம் பில்லிங்ஸ்
ஹேல்ஸ் மற்றும் ராயைப் போலவே, சாம் பில்லிங்ஸும் ஏலத்தில் எந்தவொரு அணியாளும் தேர்வு செய்யப்படாத இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஆவார். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக உள்ள சாம் பில்லிங்ஸ் போட்டியை வெல்ல முக்கிய வீராக இருந்திருப்பார். ஆனால் எந்த அணியின் கண்ணிலும் படவில்லை.
கடந்த கோடை மாதங்களில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்தார். ஆறு போட்டிகளில் விளையாடி 78 க்கு மேல் சராசரி வைத்திருந்தார். 17 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருந்த பில்லிங்ஸ் 17.47 சராசரியைக் கொண்டிருந்தார். இருப்பினும், அவரது அடிப்படை விலை ரூ .2 கோடி என்பதால் அணிகள் அவரை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.
மார்ட்டின் கப்டில்
தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, நியூசிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்டில் விற்கப்படாமல் போய்விட்டார். ஐபிஎல் 2020 ஏலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்ட கப்தில், கடந்த ஆண்டு நடந்த ஏலத்திலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
கப்திலின் டி-20 சராசரி நன்றாக உள்ளது. மற்றும் ஒருநாள் போட்டியில் இரட்டைக் சதத்தையும் பெற்றுள்ளார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் ஒரு நிலையான வீராக செயல்படவில்லை. 13 போட்டிகளில் விளையாடி உள்ள இவரின் சராசரி 22.0 –வாக உள்ளது.
மிட்செல் மெக்லெனகன்
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிலே மெரிடித்தை பஞ்சாப் அணி 8 கோடிக்கு ஏலம் எடுத்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனகன் விற்கப்படாமல் போனார். நியூசிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சளர்களுள் ஒருவரான இவர், முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து பந்துவீச்சாளர்களின் வரிசையை வழிநடத்தி இருந்தார்.
இதுவரை 56 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மெக்லெனகன் 71 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெத் ஓவர்களில் சிறந்த யார்க்கர்களை வீசும் திறன் படைத்தவர். ஆனால் வயது முதிர்வு அவரை தொற்றிக் கொண்டுள்ளதால், அவர் தெரிவு செய்யப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil