South Africa pacer Sisanda Magala joins Chennai Super Kings Tamil News: 10 அணிகள் களமாடும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், சென்னை அணி மீண்டும் ஒரு சீனியர் வீரரை வளைத்துப் போட்டுள்ளது. அந்த வீரர் தான் சிசண்டா மகலா.
யார் இந்த சிசண்டா மகலா?
கடந்த இறுதியில் கேரளாவின் கொச்சியில் நடந்த மினி ஏலத்தில் சென்னை
இந்நிலையில், காயம் அடைந்த ஜேமிசனுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் தென் ஆப்ரிக்க வீரர் சிசண்டா மகலாவை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. சிசண்டாவின் பெயர் ஐபிஎல் தொடருக்கான மினி எலத்தில் இடம் பெற்று இருந்தாலும் அவரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை.
32 வயதான சிசண்டா மகலா தென் ஆப்பிரிக்க அணிக்காக கடந்த 2021ல் அறிமுமானார் 5 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஏப்ரல் 2021 முதல் அவர் டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த முதலாவது தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் இடம் பிடித்து இருந்தார். இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி கவனம் ஈர்த்த அவர், 8.68 என்ற எக்கனாமியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, 5வது அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரரானார்.

டெத் ஓவர்களில் துணிச்சலாக பந்துவீசும் சிசண்டா மகலா தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரின் பவர்பிளேயில் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். முதல் 6 ஓவர்களிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுப்பவராகவும் இருக்கிறார். தவிர, டி20 போட்டிகளில் 2 அரை சதங்களை அடித்துள்ள அவர் லோ-ஆடரில் அணிக்கு பலம் சேர்பவராகவும் உள்ளார். அவரது சென்னை அணி வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
A crucial double strike for Sisanda Magala 💥💥#Betway #SA20 #JSKvSEC @Betway_India pic.twitter.com/at5lAC6LEM
— Betway SA20 (@SA20_League) February 5, 2023
Magizhchi, Magala! Roar proud. 🥳#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/Hn3A94CcFa
— Chennai Super Kings (@ChennaiIPL) March 19, 2023
வருகிற 31ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil