அஸ்வின் உள்ளே… இந்த வீரர் வெளியே… வெளியான புது தகவல்!
Ravichandran Ashwin would join ind vs eng 4th test Tamil News: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இருந்து ஜடேஜா அல்லது இஷாந்த் சர்மா கழற்றி விடப்படும் பட்சத்தில் அஸ்வின் அணியில் இணைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
R Ashwin Tamil News: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. எனவே தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ம் தேதி முதல் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றியை சுவைக்கும் அணிக்கு தொடரில் முன்னேற்றம் கிடைக்கும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Advertisment
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் 4 வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் மட்டுமே களமிறங்கியது. இதில் அணியின் மூத்த வீரரும், முதன்மை சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திர அஷ்வின் இடம்பெறாதது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருந்தது.
Advertisment
Advertisement
இதனால் எதிர்வரும் 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அணியில் சேர்ப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவரை முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இல்லாமல் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராகவே அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு வேளை சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் அணியில் இணையும் பட்சத்தில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா வெளியேற்றப்படுவார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இஷாந்த் சர்மாவின் பணிச் சுமையை குறைக்கும் வகையிலும், அஷ்வினுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அஸ்வின் களமிறங்க மற்றொரு வாய்ப்பாக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். ஏனெனில், ஜடேஜாவிற்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து அவர் மீள நிச்சயம் கால அவகாசம் தேவை. ஒருவேளை அவரால் 4வது போட்டியில் விளையாட முடியாத பட்சத்தில் நிச்சயம் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தவிர, ஓவல் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்குமென கருதப்படுவதால் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் களம் காணும் எனத் தெரிகிறது.