Cricket news in tamil: MCG to host India vs Pakistan Test - இந்தியா-பாக்,. டெஸ்ட்டை நடத்தும் மெல்போர்ன்? தலைமை நிர்வாகி கூறுவது என்ன? | Indian Express Tamil

இந்தியா-பாக்,. டெஸ்ட்டை நடத்தும் மெல்போர்ன்? தலைமை நிர்வாகி கூறுவது என்ன?

மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதாக தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.

Cricket news in tamil: MCG to host India vs Pakistan Test
General view of the Melbourne Cricket Ground. (Reuters / Jason O'Brien)

Melbourne Cricket Ground to host India vs Pakistan Test Tamil News: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட்டில் பரம போட்டியாளர்களாக இருந்து வருகின்றனர். எனினும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான இருதரப்பு போட்டிகள் 2007 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டது. இதனால், இவ்விரு அணிகள் இருதரப்பு போட்டிகளைத் தவிர, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று வருகின்றன.

கடைசியாக இந்த இரு அணிகளும் சந்தித்தது அக்டோபரில் நடந்த டி-20 உலகக் கோப்பையில் போட்டியில் தான். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. மேலும், இப்போட்டியை பார்க்க மெல்போர்ன் மைதானத்தில் 90,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.

இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக அதன் தலைமை நிர்வாகி ஸ்டூவர்ட் ஃபாக்ஸ் கூறுகையில், “இரு அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடருக்கான இடத்தை நிரப்புவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று டி20 உலகக் கோப்பை போட்டியின் சூழ்நிலை காட்டுகிறது.

அந்த விளையாட்டின் சூழ்நிலை, நான் அப்படி எதையும் உணர்ந்ததில்லை. ஒவ்வொரு பந்தின் பின்னும் இருந்த சத்தம் அபாரமாக இருந்தது. எம்.சி.ஜி தொடர்ந்து மூன்று (டெஸ்ட்) போட்டிகள் அழகாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறையும் அதன் இருக்கைகளை நிரப்பலாம்.

நாங்கள் அதை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து நடத்துவோம். எனக்கு தெரியும் (விக்டோரியா) அரசாங்கமும் உள்ளது. மிகவும் பிஸியான கால அட்டவணையில், என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில் இருந்து இது மிகவும் சிக்கலானது. எனவே அதுவே பெரிய சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட் ஆஸ்திரேலியா, விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இந்த திட்டத்தை முன்வைக்கும் என்று நம்புகிறேன்.

உலகெங்கிலும் உள்ள சில ஸ்டேடியங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை நீங்கள் காணும்போது, ​​​​ஸ்டேடியங்கள் ஃபுல் ஹவுஸ் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், ஃபுல் ஹவுசுடன் விளையாட்டைக் கொண்டாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” ஃபாக்ஸ் கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil mcg to host india vs pakistan test