English cricketer Moeen Ali recalls actor ajith’s ‘Valimai Update’ Tamil News: சமீபத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் மொயீன் அலி, 'தன்னிடம் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டது தன்னால் மறக்க முடியாத ஒன்று' என்று கூறியுள்ளார்.
English cricketer Moeen Ali recalls actor ajith’s ‘Valimai Update’ Tamil News: சமீபத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் மொயீன் அலி, 'தன்னிடம் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டது தன்னால் மறக்க முடியாத ஒன்று' என்று கூறியுள்ளார்.
Moeen Ali Tamil News: இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக வலம் வருபவர் மொயீன் அலி. கடந்த 2014ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக விளையாடி வரும் இவர், இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,914 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தனது ஆஃப் ஸ்பின் மூலம் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Advertisment
தற்போது ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி வரும் இவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். மொயீன் அலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து பேசியுள்ளார்.
Advertisment
Advertisements
அதில் அவர், கடந்த சில மாதங்களாகவே பயோ பபுள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து கிரிக்கெட் விளையாடி வருவதாகவும், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் போன்ற கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க உள்ளதாகவும் இதனால் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்களில் பங்கேற்று வருவதால் மனஅழுத்தமும் அதிகமாகி வரும் காரணத்தினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் வெளியேறுவதாக அறிவித்ததாக தெரிவித்துள்ளார்.
தனது கிரிக்கெட் பயணத்தில் மறக்க முடியாத 2 தருணங்களை பகிர்ந்து கொண்ட 34 வயதாகும் மொயீன் அலி, சென்னையில் நடந்த டெஸ்டின் போது நடந்த சம்பவம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார். "இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் நான் பவுண்டரி லைனுக்கு அருகே நின்றுக்கொண்டிருந்தேன். அப்போது என்னை அழைத்த ரசிகர்கள் ‘வலிமை' அப்டேட் எப்போது' எனக் கேட்டார்கள். எனக்கு அப்போது ஒன்றுமே புரியவில்லை. அதன்பிறகு தான் நடிகர் அஜித் குறித்து எனக்கு தெரியவந்தது. இது எனக்கு மறக்கவே முடியாத ஒரு சம்பவமாக மாறியுள்ளது" என்று கூறியுள்ளார்.