scorecardresearch

தோனியை கடவுளா பார்க்கும் இந்திய வீரர் இவர் தானம்…!

‘MS Dhoni is like God’ Nitish Rana about Rishabh Pant Tamil News: தோனியை கடவுளாக பார்க்கும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் குறித்து இளம் வீரர் நிதிஷ் ராணா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

Cricket news in tamil: ‘MS Dhoni is like God’ Nitish Rana about Rishabh Pant Tamil News:

Cricket news in tamil: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிளிரச் செய்த இந்திய கேப்டன்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால் இவர் தலைமையில் களம் கண்ட இந்திய அணி ஐசிசி நடத்திய 3 வகையான உலக கோப்பையையும் கைப்பற்றியது. மேலும் ஏனைய அணிகளால் பதிவு செய்யப்பட பதிவுகளையும் தகர்த்தெறிந்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி 2019ம் ஆண்டோடு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார் தோனி. கேப்டனாக இவரின் ஆளுமையையும், களத்தில் கூலாக இருந்து சாதிக்கும் இவரின் திறமையையும் பார்த்து இவருக்கு உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேலும் கிரிக்கெட் அணிகளில் விளையாடும் சில வீரர்கள் இவரை ஒரு முன்னுதாரணமாகவும் கருதி வருகின்றனர்.

இந்நிலையில், தோனியை கடவுளாக பார்க்கும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் குறித்து இளம் வீரர் நிதிஷ் ராணா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல. இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான். இது குறித்து இளம் வீரர் ராணா கூறுகையில், “ரிஷப் பண்ட் தோனியை மிகவும் வியந்து பார்க்கிறார். அதுமட்டுமின்றி தூங்கி எழும் போது தான் பார்க்க விரும்பும் நபராக தோனி இருக்க வேண்டும் என அவர் விரும்புவார். இதைப் பற்றி என்னிடமே பலமுறை அவர் கூறியிருக்கிறார்.

மேலும், தோனியுடன் ஒப்பிடுவது தவறு என்றும் தான் அதற்கு தகுதியானவர் இல்லை என்றும் பல முறை சொல்லி இருக்கிறார். அதோடு தோனி தனக்கு கடவுள் போன்றவர் எனவும் பண்ட் என்னிடம் கூறியுள்ளார்” என்று நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil ms dhoni is like god nitish rana about rishabh pant tamil news