scorecardresearch

‘என்னை மிரள வைத்த இந்திய வீரர் இவர்தான்’ – மனம் திறந்த முத்தையா முரளிதரன்!

Former srilankan cricketer muttiah muralitharan on virender sehwag Tamil News: ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரன், தன்னுடைய கிரிக்கெட் வாழக்கையில் தன்னை மிரட்டிய பேட்ஸ்மேன்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

cricket news in tamil: muttiah muralitharan talks about virender sehwag

srilankan cricketer muttiah muralitharan tamil news: இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கடந்த 1992ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளும்(133 டெஸ்ட்), ஒரு நாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகளும் (350 ஆட்டம்) வீழ்த்தியுள்ளார். மேலும் இந்த இரண்டு பார்மெட்டிலும் அதிக விக்கெட்களை கைப்பற்றி உலக சாதனை படைத்த வீரரும் இவர் தான்.

முத்தையா முரளிதரன், அவர் விளையாடிய காலத்தில் பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ப சொப்பனமாக திகழ்ந்தவர் என்று கூறினால் மிகையாகாது. அவ்வளவு துல்லியமாக பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார். இவரின் சூழலில் சிக்காத வீரர்களே இல்லை எனக் கூறும் அளவுக்கு அனைவரையும் கதிகலங்க வைத்தவர். இருப்பினும், இவரது சுழல் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக்கிடம் மட்டும் செல்லுபடியாகவில்லை. இதை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்தில், தன்னை மிரள வைத்த பேட்ஸ்மேன்கள் குறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “எனது காலக்கட்டத்தில் பிரையன் லாரா ( வெஸ்ட் இண்டீஸ்), வீரேந்திர ஷேவாக் (இந்தியா) ஆகியோருக்கு பந்து வீசுவது தான் மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு எதிராக நிறைய அபாயகரமான பேட்ஸ்மேன்கள் விளையாடி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் தான் எனக்கு அதிகமாக குடைச்சல் கொடுத்தவர்கள். இருவரும் நான் எப்படி பந்து வீசுவேன் என்பதை புரிந்து கொண்டு மிகக் கச்சிதமாக செயல்படுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அதிரடி வீரர் ஷேவாக்கிற்கு பந்து வீசுவது குறித்து முத்தையா பேசுகையில், “ஷேவாக்குக்கு பந்து வீசும் போது மட்டும் நான் பயந்து இருக்கிறேன். ஏனெனில், அவர் அச்சமின்றி விளையாடக்கூடிய ஒரு ஆட்டக்காரர். டெஸ்ட் போட்டியில் 2 மணி நேரம் களத்தில் அவர் நின்றால் நிச்சயம் 150 ரன்கள் திரட்டி விடுவார். ஒரு நாள் முழுவதும் அவர் விளையாடினால் ஸ்கோர் போர்டில் அவரது பெயரில் 300 ரன்கள் இருக்கும்.

அன்றைய தினம் முதல் பந்தை சந்தித்தாலும் சரி, 98 அல்லது 99 ரன்னில் இருந்தாலும் சரி. தடுப்பாட்டத்தில் ஈடுபடும் எண்ணம் அவருக்கு இருக்காது. மற்றவர்கள் இதே சூழலில் இருந்தால் ஒன்று, இரண்டு ரன் வீதம் எடுத்து சதத்தை நிறைவு செய்ய நினைப்பார்கள்.ஆனால் ஷேவாக் சதத்தை பற்றி கவலைப்படமாட்டார். அந்த நிலையிலும் பந்தை சிக்சருக்கு விரட்டவே முயற்சிப்பார்.

மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவது அவருக்கு பிடிக்கும். கில்கிறிஸ்ட், ஜெயசூர்யா போன்று தனிநபராக வெற்றி தேடித்தரக்கூடிய திறமைசாலி சேவாக். 2009-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் நான் அவருக்கு எப்படி பந்து வீசினாலும் அடித்து தள்ளினார். அந்த டெஸ்டில் அவர் 293 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார்.” என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரரான சச்சின் தெண்டுல்கர் பற்றிய பேசிய அவர், “சச்சின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரிடம் சிறிய பலவீனம் உள்ளது. அது என்னவென்றால், நான் வீசும் ஆப்-ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக அவர் கொஞ்சம் பலவீனமாக ஆடுவார். இதனால் இந்த வகை பந்து வீச்சில் அவரை பலமுறை அவுட் ஆக்கி இருக்கிறேன்.” என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்த முரளிதரன், தற்போது ஐ.பி.எல். தொடருக்கான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil muttiah muralitharan talks about virender sehwag