'இப்போதைக்கு என் போகஸ் எல்லாம் ஐபிஎல்-ல மட்டும் தான்' - நட்டுவின் அதிரடி பதில்
Natarajan latest interview Tamil News: அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து மீண்டும் தனது பயிற்சியை துவங்கியுள்ள யார்க்கர் மன்னன் நடராஜன், தனது தற்போதைய போகஸ் எல்லாம் ஐபிஎல் தொடரில் மட்டும் தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Natarajan latest interview Tamil News: அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து மீண்டும் தனது பயிற்சியை துவங்கியுள்ள யார்க்கர் மன்னன் நடராஜன், தனது தற்போதைய போகஸ் எல்லாம் ஐபிஎல் தொடரில் மட்டும் தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Cricket news in tamil: கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தமிழக வீரர் நடராஜன். இந்த தொடரில் மிக துல்லியமாக யார்க்கர் பந்துகளை வீசிய இவர் உலகின் பல முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதனால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக இடம் பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அங்கு நடந்த போட்டிகளின் போது இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் காயம் ஏற்படவே, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 பார்மெட்களிலும் அறிமுகமாகி அசத்தினார் நடராஜன்.
Advertisment
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் நடராஜன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழங்காலில் ஏற்பட்ட காயம் தொடரின் பாதியிலேயே விலகினார். பிறகு காயத்திற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட இவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அதோடு, காயம் தற்போது முழுவதும் குணமடைந்து உள்ளதால் நிதானமாக தனது பயிற்சிகளை துவங்கி உள்ளார்.
Advertisment
Advertisements
இந்நிலையில், யார்க்கர் மன்னன் நடராஜன் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், தனது தற்போதைய போகஸ் எல்லாம் ஐபிஎல் தொடரில் மட்டும் தான் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து அவர் பேசுகையில், "அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் தற்போது பூரண குணமடைந்து இருக்கிறேன். என்னுடைய பயிற்சியை இப்போது தான் மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளேன். இந்த மாத இறுதியில் வலைப் பயிற்சியில் ஈடுபட உள்ளேன். இப்போதைக்கு என்னுடைய நோக்கம் அனைத்தும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் மட்டுமே உள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன்னர் நான் முழுவதுமாக தயாராகி விடுவேன். ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் ஐபிஎல் ஒத்தி வைக்கப்பட்ட போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்போதைக்கு என்னுடைய இலக்கு எல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். அதன் பின்னர் நான் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்" என்று நடராஜன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“