scorecardresearch

‘தோனியை வர்ணிக்க ஒரு வார்த்தை பத்தாது’ – சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான்

Rashid khan about former Indian captain MS Dhoni Tamil News: இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ஆப்கான் வீரர் ரஷீத் கான், கேப்டன் கோலியை ‘கிங் கோலி’ என்றும், யுவராஜ் சிங்கை ‘சிக்ஸர் மன்னன்’ என்றும், தோனியை வர்ணிக்க ஒரு வார்த்தை பத்தாது என்றும் கூறியுள்ளார்.

Cricket news in tamil: One word is not enough to describe about MS Dhoni says Rashid khan

Cricket news in tamil: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் மிகச் சிறந்த வீரராக வலம் வருபவர் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான். சர்வதேச போட்டிகளில் இவரின் சிறப்பான பந்து வீச்சு ஐபிஎல் தொடருக்கான வாய்ப்பை பெற்றுத் தந்தது.

தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் ரஷீத் கான், இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடான கேள்வி பதில் அமர்வில் பங்கேற்று இருந்தார். இந்த அமர்வில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து நிறைய கேள்விகள் கேட்க்கப்பட்டன. அதில் ஒன்றாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, தற்போதை கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் குறித்து ஒரு வார்த்தையில் வருணிக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

அதற்கு புன்முறுவலுடன் பதிலளித்துள்ள ரஷீத், கேப்டன் கோலியை ‘கிங் கோலி’ என்றும், யுவராஜ் சிங்கை ‘சிக்ஸர் மன்னன்’ என்றும் கூறியுள்ளார். ஆனால் முன்னாள் கேப்டன் தோனியை குறித்த பதிலளிக்கையில், ‘அவரை வர்ணிக்க ஒரு வார்த்தை பத்தாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘கடந்த காலத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் வீரருக்கு பந்து வீச நினைத்தால் நீங்கள் யாருக்கு வீசுவீர்கள்? என்ற ரசிகரின் கேள்விக்கு, ‘சச்சின் சாருக்கு’ என்றும், ரோஹித் சர்மா மற்றும் கெவின் பீட்டர்சனின் புல் ஷாட் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ரஷீத் கான் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil one word is not enough to describe about ms dhoni says rashid khan

Best of Express