Pakistan pacer Wahab Riaz Tamil News: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களுள் ஒருவராக வலம் வந்தவர் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ். கடந்த 2008ம் ஆண்டு அந்நாட்டு தேசிய அணியில் அறிமுமான இவர் 27 டெஸ்ட், 91 ஒருநாள் மற்றும் 36 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 83 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 120 விக்கெட்டுகளையும், டி20யில் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இடதுகை வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் சாதாரணமாக மணிக்கு 90 முதல் 96 மைல் வேகத்தில் வீசக்கூடியவர். அவரது அதிகபட்ச வேகம் 149.6 கி.மீ ஆகும். சமீபத்தில் பிரபல கிரிக்கெட் இணைய பக்கம் வெளியிட்டுள்ள டாப் -10 வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ரியாஸ் 2வது இடத்தை பிடித்திருந்தார். கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் அவரது ஆல்ரவுண்ட் செயல்திறன் அவருக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
இந்நிலையில், வஹாப் ரியாஸ் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கவில்லை. அவர் கடைசியாக 2018ல் தேசிய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். பிறகு நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியில் அங்கம் வகித்திருந்த இவர் 2020ம் ஆண்ட்டிற்குப்பின் அந்த அணிகளில் இருந்தும் கழற்றி விடப்பட்டார்.
இந்த நிலையில், வஹாப் ரியாஸ் தெருக்களில் கடலை வறுத்து விற்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பதிவில் அவர், "உங்களது ஆர்டர்களை என்னக்கு அனுப்புங்கள். என்ன வேண்டும் எவ்வளவு வேண்டும் கூறுங்கள். பின்குறிப்பு: இந்த தள்ளுவண்டியில் சிறிது நேரம் செலவழித்தது எனது குழந்தை பருவ நாட்களை நினைவூட்டுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Your "Chano wala Cha-cha" of the day!
Send your orders "kia banaon aur kitnay ka banaun"? 🤣
P.S.
Loved spending some time around this special handcart reminded me of my childhood days. pic.twitter.com/gbfP2EJJso— Wahab Riaz (@WahabViki) January 10, 2022
தற்போது இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.