‘இந்திய மக்களின் துயரம் பெரும் கவலையை தருகிறது!’ 50,000 டாலர் அள்ளிக் கொடுத்த பாட் கம்மின்ஸ்

Pat Cummins donates $50,000 to PM Cares Fund Tamil News: இந்தியாவின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் 50,000 டாலர் (ரூ.37 லட்சம்) நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

Cricket news in tamil: Pat Cummins donates $50,000 to purchase oxygen supplies for India

Cricket news in tamil: இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை உருவாகியுள்ள நிலையில், அதன் தாக்கம் முதல் அலையை விட மிக கொடூரமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 11,808 பேர் தொற்று பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்திய மக்களின் துயரம் பெரும் கவலையை தருகிறது என்று கூறியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் 50,000 டாலர் (ரூ.37 லட்சம்) நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. நாட்டில் நிலவும் அசாதாணர சூழலை கருத்தில் கொண்டு 50,000 டாலர் (ரூ.37 லட்சம்) வழங்குகிறேன். மேலும் தொடரில் கலந்து கொண்டுள்ள வீரர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை பிரதமரின் கொரோனா நிவாரண நிதியுதவி திட்டத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Web Title: Cricket news in tamil pat cummins donates 50000 to purchase oxygen supplies for india

Next Story
கொரோனா: குடும்பத்தினர் ஆறுதலுக்காக ஐபிஎல்-ஐ துறந்த அஸ்வின்!IPL 2021 Tamil News: "Taking Break" From IPL 2021 Due To Family's Fight With COVID-19 Says Delhi capitals spinner Ashwin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X