scorecardresearch

பிளேயர் டிராஃப்ட் பதில் ஏலம், ஒரு அணிக்கு 70 லட்சம்… டி.என்.பி.எல்-லில் புதிய விதிகள் அறிமுகம்!

2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் டி.என்.பி.எல் தொடர் போட்டியில் பங்கேற்க விரும்பும் அனைத்து வீரர்களும் டிசம்பர் 28 முதல் ஜனவரி 20, 2023க்குள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Cricket news in tamil: Player auction to replace draft system in TNPL
TNPL 2022 winners with the trophy. (FILE)

7-வது டி.என்.பி.எல் (தமிழ்நாடு பிரீமியர் லீக் – TNPL) தொடர் போட்டிகள் அடுத்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் தற்போதுள்ள பிளேயர் டிராஃப்ட் முறைக்கு பதிலாக வீரர்கள் ஏலம் நடைபெறும் என்றும், ஏலத்தில் ஒரு அணிக்கு 70 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த முடிவுகள் சமீபத்தில் நடந்த டி.என்.பி.எல் கவுன்சில் கூட்டத்தில் எட்டப்பட்டது எனவும், அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஏலத்தை நடத்துவதற்கான நடவடிக்கையும் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், “2023 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் டி.என்.பி.எல் தொடர் போட்டியில் பங்கேற்க விரும்பும் அனைத்து வீரர்களும் டிசம்பர் 28 முதல் ஜனவரி 20, 2023க்குள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த தொடருக்காக பதிவு செய்த ஒரு வீரர் காயம், இந்திய அணி பொறுப்புகள் மற்றும் பிற பிசிசிஐ கடமைகள் தவிர மற்ற காரணங்களுக்காக டி.என்.பி.எல்-லில் பங்கேற்காத நிலையில், அந்த வீரரை பிசிசிஐ நடத்தும் டி20 போட்டிகளுக்கு தமிழக டி20 அணியில் களமிறக்க பரிசீலிக்கக்கூடாது என்று டி.என்.பி.எல் கவுன்சில் அபெக்ஸ் கவுன்சிலுக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது.

அடுத்த பதிப்பில் இருந்து முடிவு மறுஆய்வு முறையை (டிஆர்எஸ்) அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil player auction to replace draft system in tnpl

Best of Express