Advertisment

தலைமை பயிற்சியாளராகிறார் ராகுல் டிராவிட்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ…!

Rahul Dravid appointed as head coach of the Indian cricket team Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
Nov 03, 2021 21:40 IST
Cricket news in tamil: Rahul Dravid appointed as head coach of the Indian cricket team.

Cricket news in tamil: இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

Advertisment
publive-image

டிராவிட் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் அந்த அறிவிப்பில் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு மூலம் இந்திய அணி பல உயரங்களை அடையும் என நம்புவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cricket #Bcci #Sports #Rahul Dravid #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment