scorecardresearch

இலங்கைக்கு எதிரான தொடரில் டிராவிட் பயிற்சியாளர்; ரசிகர்கள் வாழ்த்து மழை!

Rahul Dravid will be the coach for Sri Lanka tour fans reactions Tamil News: இலங்கைக்கு எதிரான தொடரில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

Cricket news in tamil: Rahul Dravid will be the coach for Sri Lanka tour fans reactions

Cricket news in tamil: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த அணிக்கு மூத்த வீரர் ஷிகர் தவான் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் டிராவிட் கடந்த சில ஆண்டுகளாக 19 வயதுக்குட்பட்டோருக்கன இந்திய அணிக்கும், இந்தியா ஏ அணிக்கும் பயிற்சியளித்து வரும் நிலையில், தற்போது இலங்கை செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து ராகுல் டிராவிட்வின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திழைத்துள்ளனர். மேலும் இலங்கை சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 2 தொடர்களிலும் கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது புகைப்படத்துடன் கூடிய பல பதிவுகளை சமூக வலைதள பக்கங்களில் அவரது ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil rahul dravid will be the coach for sri lanka tour fans reactions