Rishabh Pant tests positive for Covid-19 Tamil News: இங்கிலாந்தில் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியை காண சென்ற இந்திய வீரர் ரிஷப் பந்த்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Cricket news in tamil: Rishabh Pant tests positive for Covid-19
Cricket news in tamil: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. வரும் ஆகஸ்ட் 4 முதல் தொடங்கவுள்ள இந்த தொடருக்கு முன்னதாக ஜூலை 20 முதல் தொடங்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.
Advertisment
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது. அதில் ஒரு வீரருக்குச் சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதியானதாகவும் மற்றொரு வீரருக்குப் பாதிப்பு இருந்தாலும் நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது. மேலும் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த வீரருக்கு வரும் 18-ம் தேதி மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறவுள்ளது என்றும் தெரிவித்து இருந்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த இந்திய வீரர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பந்த் இங்கிலாந்தில் தற்போது நடந்து முடிந்த யூரோ கால்பந்து போட்டியை காண சென்றவர்களுள் ஒருவர் என்றும், அதனால் தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தொற்று பாதிக்கப்பட்டுள்ள பந்த் சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
இது குறித்து பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "ஒரு கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த எட்டு நாள்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அணியினர் தங்கும் விடுதியில் அவர் தங்கவில்லை. எனவே மற்ற வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயரைச் தெரிவிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்து தலைமை நிர்வாகி டாம் ஹாரிசன் இது குறித்து பேசுகையில், "டெல்டா மாறுபாட்டின் தோற்றம், உயிரியல்பாதுகாப்பு சூழல்களை கடுமையாக அமல்படுத்துவதிலிருந்து நாம் விலகிச் செல்வது, தொற்று பரவல் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். கடந்த 14 மாதங்களில் பெரும்பகுதியை மிகவும் தடைசெய்யப்பட்ட நிலையில் எங்கள் வீரர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிப்பதற்காக, நெறிமுறைகளை மாற்றியமைக்க முயற்சிக்க நாங்கள் ஒரு மூலோபாய தேர்வு செய்தோம், ”என்று கூறினார்.