Advertisment

"அடுத்த 2 டி20 உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருக்க வேண்டும்" - ஜாம்பவான் வீரர் கருத்து!

Former indian cricketer Sunil Gavaskar about Rohit Sharma Tamil News: அடுத்த இரண்டு டி20 உலகக் கோப்பைகளுக்கு ரோகித் சர்மா தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Cricket news in tamil: Rohit Sharma as India captain for 2 t20 world cups says Sunil Gavaskar

Rohit Sharma Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின் கேப்டன் பதவியில் விலகுவதாக அறிவித்து இருந்தார். கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாத பொருளாக இருந்து வருகிறது. மேலும், அந்த பதவிக்கு சரியான நபர் மூத்த வீரர் ரோகித் சர்மா தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment
publive-image

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், "அடுத்த 2 டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் செயல்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் மேலும் பேசியிருப்பதாவது;-

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய டி20 அணியில் அடுத்தடுத்து கேப்டன்கள் மாற்றம் தேவையில்லாத ஒன்று. எனவே விராட் கோலிக்கு பிறகு, அடுத்து வரும் 2 டி20 உலகக் கோப்பைக்கு ரோகித் சர்மா மட்டுமே கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில், அவர் கோலி இல்லாத சமயத்தில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார். அவரது தலைமையில் பங்கேற்ற சில போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை சுவைத்துள்ளது. அதோடு நிதாஸ் டிராபி கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

publive-image

மேலும், ரோகித் சர்மா வழிநடத்தி வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. எனவே, இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோகித் சர்மா தான் நியமிக்கப்பட வேண்டும்

இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக கே எல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட்யை நியமிக்கலாம். கே எல் ராகுல் தற்போது பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி அவரால் நீண்டகாலம் கேப்டான செயல்பட முடியும் என்பதால் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படுவது அவசியம்.

publive-image

அதேவேளையில், விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பண்ட் நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான டெல்லி அணியை மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடா மற்றும் நோர்க்கியா போன்றோரை மிகவும் சிறப்பாக தனது அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப அவர் பயன்படுத்தி வருகிறார். மேலும், ரிஷப் பண்ட் மிகவும் ஸ்மார்ட்டான கேப்டன்சி செய்து வருகிறார்.

publive-image

இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Rohit Sharma Cricket T20 Worldcup Sunil Gavaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment