வீடியோ: தாறுமாறாக சிக்ஸர்களை பறக்கவிடும் சிறுமி… பாராட்டு மழை பொழிந்து சச்சின் பதிவு!

ராஜஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், சிறப்பாக கிரிக்கெட் ஆடுவதை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி வாழ்த்து மழை பொழிந்துள்ளார்.

Cricket news in Tamil: Sachin Tendulkar shares video of a girl hitting ball for sixes
Sachin Tendulkar on the left and a young girl playing cricket on the right. (Screengrab)

Master Blaster Sachin Tendulkar posted a video of a young girl smashing the ball all over the ground on his Twitter Tamil News: கிரிக்கெட் மீது காதல் கொண்ட ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, இளம் வயதினரிடையே அதிகளவில் வரவேற்பை பெற்று வருகிறது. விடுமுறை நாட்களில் பலரும் பேட்டும் கையுமாக விளையாடி வருகின்றனர். மேலும், சிலர் தங்களின் வாழக்கையின் ஒரு பகுதியாக கிரிக்கெட் விளையாட்டை எடுத்து, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், சிறப்பாக கிரிக்கெட் ஆடுவதை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி வாழ்த்து மழை பொழிந்துள்ளார். மேலும், தாறுமாறாக சிக்ஸர்களை பறக்கவிடும் அந்த சிறுமியின் வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சச்சின் தனது ட்விட்டர் பதிவில், “(ஏலம் நேற்று முடிவடைந்து போட்டிகள் இப்போதே தொடங்கிவிட்டன). உங்கள் பேட்டிங்கை மிகவும் ரசித்தேன். 🏏👧🏼.” என்று கூறி பதிவிட்டுள்ளார்.

இதேபோல், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவும் சிறுமியைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். “இளம் பெண்ணின் கிரிக்கெட் திறமை மற்றும் விளையாட்டின் மீதான ஆர்வம் கண்டு வியக்கிறேன்! பெண்கள் கிரிக்கெட்டின் எதிர்காலம் நல்ல கைகளில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நமது இளம் விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரம் அளிக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம், இதனால் அவர்கள் எதிர்காலத்தில் விளையாட்டை மாற்றியமைக்க முடியும்.” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடருக்கான ஏலம் நேற்று முடிவடைந்த நிலையில், ஏலத்தில் அதிக விலைக்கு இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (ரூ. 3.4 கோடி) வாங்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் 3.2 கோடி வாங்கப்பட்டார்.

குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதலுடன் டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் மார்ச் 4ஆம் தேதி லீக் தொடங்குகிறது. மொத்தம் 20 லீக் போட்டிகள் மற்றும் 2 பிளேஆஃப் ஆட்டங்கள் என போட்டிகள் 23 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil sachin tendulkar shares video of a girl hitting ball for sixes

Exit mobile version