Cricket news in tamil: ஆஸ்திரேலியாவில் 11 வது பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடந்த ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக லாரி எவன்ஸ் 69 ரன்களும், கேப்டன் டர்னர் 47 ரன்களும், தொடக்க வீரர் நிக் ஹாப்சன் 46 ரன்களும் சேர்த்து இருந்தனர். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
தொடர்ந்து 197 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டம்
இந்த ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹரிஸ் ராவுஃப், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் குர்டிஸ் பேட்டர்சன் விக்கெட்டை கைப்பற்றிய பிறகு விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த கொண்டாட்ட வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஹரிஸ் ராவுஃப், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் குர்டிஸ் பேட்டர்சனுக்கு ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் 2வது பந்தை வீசுகிறார். அதை பேட்டர்சன் ஆப் -சைடில் விரட்ட முயன்று விக்கெட் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார்.
அப்போது ஹரிஸ் ராவுஃப், ஓடி வந்து, 'இந்த கொரோனா தொற்று காலத்தில், கைகளை சானிடைசர் போட்டு சுத்தகமாக கழுவ வேண்டும். முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்' என்பது போல் கைகளால் சைகை காட்டி மாஸ்க் அணிகிறார். இது அங்கிருந்த பார்வையாளர்களின் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இதேபோல், தொலைக்காட்சி வர்ணனனையிலும் ஹரிஸ் ராவுஃப்பின் இந்த விழிப்புர்ணவு மிக்க கொண்டாட்டம் குறிப்பிடப்பட்டு பேசப்பட்டது. அதில் வர்ணனையாளர் ஒருவர், 'இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை நான் முன்பு பார்த்தே இல்லை' என்று கூறுகிறார்.
தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வந்த ஹரிஸ் ராவுஃப், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் 69 சேர்த்து அசத்தனாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரி எவன்ஸ் விக்கெட்டையும் கைப்பற்றினார் மிரட்டினார்.
Safety first, says Haris Rauf after taking the wicket in BBL.pic.twitter.com/vtvSdrk1w0
— Johns. (@CricCrazyJohns) January 11, 2022
பாகிஸ்தான் வீரர் - தோனியின் ஆஸ்தான ரசிகன்
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவுஃப் (28), அந்த அணிக்காக கடந்த 2020ம் ஆண்டில் அறிமுகமானார். தற்போது சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14 விக்கெட்டுகளும், 34 டி20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கூட நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனியின் ஆஸ்தான ரசிகரான இவருக்கு தான், சமீபத்தில் தோனி தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெர்சியை பரிசாக அளித்து இருந்தார்.
இந்த மகிழ்ச்சி தருணத்தை ஹரிஸ் ராவுஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் இருந்தார். அந்த பதிவில் ராவுஃப், “கிரிக்கெட் ஜாம்பவானும், கேப்டன் கூலும், இந்த ஜெர்சியை அனுப்பி எனக்கு கௌரவத்தை கொடுத்துள்ளார். இந்த ஜெர்சி எண் ‘7’ பல கோடி இதயங்களை வென்று வருகிறது. ரஸலுக்கு எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பான ஆதரவிற்கு மிக்க நன்றி.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The legend & capt cool @msdhoni has honored me with this beautiful gift his shirt. The "7" still winning hearts through his kind & goodwill gestures. @russcsk specially Thank you so much for kind support. pic.twitter.com/XYpSNKj2Ia
— Haris Rauf (@HarisRauf14) January 7, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.