Cricket news in tamil: தென்னாப்பிரிக்க அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருபவர் ஃபாஃப் டு பிளெசிஸ். தனது சிறப்பான ஆட்டத்தால் திருப்பு முனையை ஏற்படுத்தும் இவர், ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்தாண்டு தற்காலிமாக ஒத்திவைப்பட்ட தொடரில் நடந்த போட்டிகளில் அந்த அணிக்காக வலுவான ரன்களை குவித்திருந்தார். மேலும் சரியான துவக்கம் கிடைக்கமால் தவித்து வந்த துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பக்க பலமாக இருந்ததோடு, அவரை தட்டிக் கொடுத்து தேற்றினார்.
இப்படி பல நல்ல பண்புகளை உள்ளடக்கியுள்ள ஃபாஃப் டு பிளெசிஸ், தனது வாழ்வில் நடக்கும் மற்றும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவங்களை தனது உடம்பில் டாட்டூவாக போட்டுக் கொள்ளும் பழக்கமுடையவராம். இந்த டாட்டூகளுக்கு அர்த்தம் புரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பி வரும் நிலையில், அவரது இடது விலா எலும்புக்கு மேல் ஒரு வார்த்தையை டாட்டூவாக போட்டுக் கொண்டுள்ளார் டு பிளெசிஸ்.
இந்த டாட்டூவிற்கு என்ன அர்த்தமா இருக்கும் என ரசிகர்கள் பலர் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கியுள்ள நிலையில், அதற்கான அர்த்தம் தற்போது கிடைத்துள்ளது. உருது மொழியில் ‘ஃபஸல்’ என்று இருக்கும் அந்த வார்த்தைக்கு 'கிருபை’ என்று பொருள்படுமாம். அதோடு சர்வ வல்லமையுள்ள விசுவாசி என்ற மற்றொரு பொருளும் உள்ளதாம்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 'லார்ட்ஸ்' மைதானத்தில் தான் அறிமுகமானதை நினைவு கூறும் விதமாக அவரது கையில் ஒரு டாட்டூ போட்டுள்ளார் டு பிளெசிஸ். இதே போல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதை நினைவு படுத்தும் விதமாக 'அடிலெய்டு' மைதானத்தின் பெயரையும் டாட்டூ போட்டுள்ளார்.
மேலும், டு பிளெசிஸ் அவரது மனைவி இமாரி விஸ்ஸரின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களது திருமணத்திற்கு பிறகு ‘அகபே’ என்ற வார்த்தையை டாட்டூவாக போட்டுள்ளார். ‘அகபே’ என்றால் 'நிபந்தனையற்ற அன்பு' ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“