ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்: டெல்லி கேப்பிடல்ஸ் தவிப்பு

Shreyas Iyer ruled out of IPL 2021 Tamil News: ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் இருந்தும் விலக்கப்பட்டுள்ளார்.

Cricket news in tamil Shreyas Iyer ruled out of IPL 2021 after suffering shoulder injury

Cricket news in tamil: தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் இவ்விரு அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இதற்கிடையில், முதல் போட்டியில் களமிறங்கி விளையாடிய மிடில்-ஆடர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆட்டத்தின் 8-வது ஓவரில் இங்கிலாந்தின் பேர்ஸ்டோ அடித்த பந்தை தக்க பாய்ந்தார். அப்போது அவரது தோள்பட்டை யில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஸ்கேன் செய்து பார்க்கையில் அவரது இடது தோள்பட்டை கொஞ்சம் இறங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் ஸ்ரேயாஸ், தனது ட்வீட்டில் ‘ஒருவருக்கு பின்னடைவு ஏற்படுவது, அவர் மீண்டும் வலுவாக திரும்பி வர வேண்டும் என்பதற்காவே, நான் விரைவில் திரும்பி வருவேன்’ என்றும் “நான் நீங்கள் அனுப்பிய செய்திகளைப் படித்து வருகிறேன், அன்பிற்கும், ஆதரவிற்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த தொடரில் மீதம் உள்ள 2 போட்டிகளிலும், அடுத்த மாதம் 9ம் தேதி முதல் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டியின் முதல் பாதி ஆட்டங்களிலும் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவரால் இந்த சீசன் முழுதும் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான உள்ள ஸ்ரேயாஸ் ஐயர், அந்த அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களுள் ஒருவர். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றதோடு, தனக்காக 519 ரன்கள் குவித்து இருந்தார். அவர் இல்லலதது அந்த அணிக்கு பேரிழப்பாக இருக்கும். மேலும் அவர் அணிக்கு திரும்பும் வரை, அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ரிஷாப் பண்ட் அல்லது அஸ்வின் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் தான் கவனிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி கேபிடல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி, பார்த் ஜிண்டால் தனது ட்வீட்டில், எங்கள் அணி கேப்டனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்த நான் மிகவும் உடைந்து போனேன். கேப்டன் நீங்கள் வலுவாக இருக்க வேண்டும். மேலும் காயம் குணமடைந்து விரைவில் அணிக்கு திருப்புவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மற்றும் டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நீங்கள் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket news in tamil shreyas iyer ruled out of ipl 2021 after suffering shoulder injury

Next Story
ஐபிஎல் 2017: பிளேஆஃப் சுற்று கெஸ்ஸிங்…..
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express