Advertisment

டி20 உலக கோப்பையை முத்தமிட்ட ஆஸி.,..! வில்லியம்சன், மார்ஷ், வார்னர் பதிவு செய்த ரெகார்ட்கள் இவைதான்…!

stats and records of New Zealand vs Australia 2021 T20 World Cup final Tamil News: நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா முதல் முறையாக கோப்பையை வென்றுள்ள நிலையில், இவ்விரு அணிகள் மற்றும் வீரர்கள் பதிவு செய்த புதிய ரெகார்ட்களை பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Cricket news in tamil: stats and records of NZ VS AUS 2021 T20 World Cup final

 NZ vs Aus T20 World Cup 2021 Tamil News: ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று ஞாயிற்று கிழமை நடைபெற்ற 7-வது டி20 உலகோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்த ஆட்டத்தில் இவ்விரு அணிகள் பதிவு செய்த புள்ளிவிவரங்கள் மற்றும் பதிவுகளை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

Advertisment
publive-image

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி; டாஸ் வென்ற அணி 6 முறை வெற்றி

இதுவரை நடந்த ஏழு ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில், ஆஸ்திரேலியா அணி உட்பட டாஸ் வென்ற அணிகளே 6 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளன.

publive-image

நடப்பு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடந்த துபாயில் பத்து போட்டிகளிலும் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றது. இதில் ஒன்பது போட்டிகளில் டாஸ் வென்ற அணிகளே வெற்றி கண்டன.

2வது அதிகபட்ச சேஸிங் ஸ்கோர்

நேற்று நடந்த டி20 இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவால் துரத்தப்பட்ட 173 ரன்கள் கொண்ட இலக்கானது இரண்டாவது வெற்றிகரமான சேஸிங் ஆகும். 2018-ம் ஆண்டு ஹராரேயில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்த 184 ரன் சேஸ் இதுவரை அதிகபட்சமாக உள்ளது.

publive-image

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரே ஒரு அணி மட்டுமே 160 ரன்களைக் கடந்து இருக்கிறது. 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

publive-image

இறுதிப் போட்டியில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்த மிட்செல் மார்ஷ்

நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் 32 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிவேகமாக அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

publive-image

ஆனால், தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் 31 பந்துகளிலேயே தனது அரைசதத்தை பதிவு செய்து, கேன் வில்லியம்சனை முந்திச் சென்றார்.

publive-image

முந்தைய 6 டி20 உலகக் கோப்பை பதிப்புகளின் இறுதிப் போட்டிகளில் அதிவேக அரைசதத்தை 2014ல் குமார் சங்கக்காரவும், 2016ல் ஜோ ரூட்-வும் 33 பந்துகளில் பதிவு செய்திருந்தனர்.

இறுதிப் போட்டியில் 85 ரன்களை குவித்த வில்லியம்சன்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 3 சிக்ஸர் 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் எந்தவொரு வீரரும் இது போன்ற ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை.

publive-image

2016ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) அணியின் வெற்றிகரமான சேஸிங்கின் போது மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர், 66 பந்துகளில் 2 சிக்ஸர் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்திருந்தார்.

ஸ்டார்க்கை வெளுத்து வாங்கிய வில்லியம்சன்…

நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்துகளை வெளுத்து வாங்கிய கேப்டன் வில்லியம்சன் 39 ரன்கள் சேர்த்தார். மேலும், வில்லியம்சன் தான் எதிர்கொண்ட 12 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார்.

publive-image

டி20 ஆட்டத்தில் ஸ்டார்க் எந்தவொரு பேட்ஸ்மேனுக்கு எதிராகவும் இவ்வளவு ரன்களை வாரிக்கொடுத்தது இல்லை.

publive-image

இதற்கு முன் 2011 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் விராட் கோலி 11 பந்துகளில் 32 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற வார்னர்…

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 289 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். மேலும், ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். முன்னதாக 2007ம் ஆண்டு நடந்த தொடக்கப் பதிப்பின் போது மேத்யூ ஹைடன் 265 ரன்கள் குவித்து இருந்தார். தற்போது அவரது சாதனையை வார்னர் முறியடித்துள்ளார்.

publive-image

அதோடு, டி20 உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்ற அணியிலிருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற 2வது வீரர் என்கிற பெருமையையும் வார்னர் பெற்றார். கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து, 2010) முதலாவது வீரராக உள்ளார்.

டி20-யில் அதிக ரன்களை குவித்த 3வது வீரராக மார்ஷ்…

2021ம் ஆண்டு நடந்த டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் 3வது வீரராக உள்ளார். மேலும், டி20 போட்டிகளில் அந்த அணிக்காக நடப்பாண்டில் அதிக ரன்களை குவித்த முதல் வீரராகவும் உள்ளார்.

publive-image

டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 1033 ரன்களுடன் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் முதலிடத்திலும், 826 ரன்களுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2வது இடத்திலும் உள்ளனர்.

ரன்களை வாரிக்கொடுத்த ஸ்டார்க்…

publive-image

நேற்றைய இறுதிப்போட்டியில் 4 ஓவர்களை வீசிய மிட்செல் ஸ்டார்க் 60 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்காக டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்களை வாரிக்கொடுத்த 2வது வீரர் மற்றும் இறுதிப் போட்டியில் அவ்வாறு செய்த முதல் வீரர் ஆனார்.

publive-image

முன்னதாக 2018ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ டை நியூசிலாந்திற்கு எதிராக 64 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket T20 Worldcup New Zealand Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment