'இந்தியா தேடும் ஆல்-ரவுண்டராக அவர் இருக்க முடியும்' - இளம் வீரரை கைகாட்டும் கவாஸ்கர்!
legend Sunil Gavaskar rich praise on KKR youngster Venkatesh Iyer Tamil News: ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், "இந்திய கிரிக்கெட் அணி தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இடத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் வெங்கடேஷ் ஐயர் பொருத்தமானவராக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
legend Sunil Gavaskar, Venkatesh Iyer Tamil News: இந்தியாவின் முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தும், அதில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இடத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் வெங்கடேஷ் ஐயர் பொருத்தமானவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
Advertisment
இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் களமாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 193 (2 அரைசதம், 25 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட) ரன்களை சேர்த்துள்ளார். மேலும், பந்துவீச்சாளராக 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தவிர, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தயுள்ள அவர் 1 சிக்ஸர் 9 பவுண்டரிகளை சிதறவிட்டு 67 ரன்கள் சேர்த்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல் - ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்ட்யா தற்போது பெரிய அளவில் பந்து வீச தவறி வருகிறார். மேலும், ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் அவர் பேட்டிங்கில் பார்மிற்கு திரும்பி இருந்தாலும் இதுவரை ஒரு பந்து கூட வீசவில்லை. இந்த தருணத்தில் வெங்கடேஷ் ஐயரின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், வெங்கடேஷ் ஐயரின் ஆட்டம் குறித்து பாராட்டி பேசியுள்ள ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், "இந்திய கிரிக்கெட் அணி தேடிக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இடத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் வெங்கடேஷ் ஐயர் பொருத்தமானவராக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “இந்திய கிரிக்கெட் அணி எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரை கொல்கத்தா அணி அடையாளம் காட்டியுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் அவரது பவுலிங் திறன்கள் பெரிய அளவில் வெளிக்காட்டவில்லை என்றாலும், அவர் வீசும் யார்க்கர் பந்துகளை பேட்ஸ்மேன்கள் விளையாட தடுமாறுகின்றனர். ஒரு இடது பேட்ஸ்மேனாகவும் அவர் சிறப்பாக விளையாடுகிறார். வீசப்படும் பந்துகளை அழகாக ஆஃப்-சைடில் அடித்து அசத்துகிறார் ” என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil