Cricket news in tamil: இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதில் சிறப்பாக விளையாடிய அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அறிமுக ஆட்டத்திலே அசத்திய பிரசித் கிருஷ்ணா கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்தவர். இவருக்கு 14 வயது இருந்தபோது கிரிக்கெட் விளையாடுவதா அல்லது கைப்பந்து (வாலி பால்) விளையாடுவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அப்பா முரளி, கல்லூரி கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். அம்மா கலாவதி மாநில கைப்பந்து (வாலி பால்) வீராங்கனையாக இருந்தவர். அதோடு பிரசித் கிருஷ்ணா நல்ல உயரமான பையனாகவும் இருந்துள்ளார். எனவே அவருக்குள் இப்படி ஒரு குழப்பம் தொற்றிக்கொண்டது.
இருப்பினும், கார்மல் பள்ளியில் கிருஷ்ணாவின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் கர்நாடக முதல் தர கிரிக்கெட் வீரர் சீனிவாஸ் மூர்த்தியின் அறிவுரை, அவரை தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றச் செய்தது.
"கிருஷ்ணா வயதிற்கு மாறான உயரமாக இருந்தார். மற்றும் 8 ஆம் வகுப்பில் இருந்தபோதே, வேகப்பந்து வீசத் துவங்கியிருந்தார். எனவே அவரது பயிற்சியாளர் சீனிவாஸ் மூர்த்தி என்னிடம், உங்கள் மகன் ஒரு கிரிக்கெட் வீரராக மாற முடிவு செய்து விட்டார் எனக் கூறினார்" என்று வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் அப்பா முரளி கிருஷ்ணா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
My first day at work was a roller coaster ride. Never over until it’s over. All’s well that ends well.🤞🏻
Cheers to this special match and many more to come. #TeamIndia #234 pic.twitter.com/UeRj3beDaT— Prasidh Krishna (@prasidh43) March 24, 2021
கிருஷ்ணா 2015-16 ஆம் ஆண்டில் கர்நாடகா அணிக்காக தனது முதல் தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையின் எம்.ஆர்.எஃப் பேஸ் அறக்கட்டளையில் விளையாட துவங்கினார். அங்கு அவரது திறமைகள் செதுக்கப்பட்டு, துல்லியமாக வேகப்பந்து பந்துகளை வீசும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மேம்பட்டு இருந்தார்.
அவரது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி, அவரை விஜய் ஹசாரே டிராபியில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறச் செய்தது. தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது.
கடந்த செவ்வாய்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் சார்பாக அறிமுகமாகிய பிரசித் கிருஷ்ணா, 10 ஓவர்களில் 54 ரன்களை வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் வீசி முதல் 3 ஓவர்களில் சில தடுமாற்றம் காணப்பட்டாலும், அடுத்த ஓவர்களில் கற்ற மொத்த வித்தைகளையும் காட்ட துவங்கினார்.
"கிருஷ்ணா நீண்ட காலமாக டி-20 போட்டிகளில் ஒரு நல்ல பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். நான் அணியுடன் இருந்தபோது, அவரைப் பற்றி ஒரு நல்ல வழி விவாதங்கள் இருந்தன. மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலியின் பாராட்டையும் பெற்றவராக இருந்தார்”என்று இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் தெரிவித்திருந்தார்.
கிருஷ்ணாவின் இந்த முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியப்படாத, கர்நாடக அணியில் விளையாடிய அவரது நண்பர் கிருஷ்ணப்ப கவுதம் கூறுகையில்,"நெருக்கடியான சூழ்நிலைகளிலும் அவர் சத்தமாகவே காணப்படுவார். இது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும், ஐபிஎல் போட்டிகளில் கேகேஆர் அணிக்காக விளையாடிபோதும் வெளிப்பட்டதை நாம்மால் காண முடிந்தது. ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் முக்கிய வீரர்கள் கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால் மற்றும் பிரப்சிம்ரான் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லவும் உதவினார்".
A moment I will always remember and cherish.
Every cricketer has the dream of representing their country. Grateful and humbled 🙏🏽🇮🇳 pic.twitter.com/1v9EDvF499— Prasidh Krishna (@prasidh43) March 22, 2021
2017 முதல் கிருஷ்ணாவுடன் பணிபுரிந்த எம்.ஆர்.எஃப் பேஸ் அறக்கட்டளையின் தலைமை பயிற்சியாளர் எம்.செந்திலநாதன், பந்துகளை துல்லியமாக டெலிவரி செய்ய வேண்டும் என்ற தன்னம்பிக்கை அதிகப்படியாக இருப்பதாகக் கூறினார்."அவர் வீசிய முதல் ஓவரில் அவருடைய பந்துகளை பறக்க விட்டனர். இருப்பினும் நிலை குழையாமல், அடுத்தடுத்த ஓவர்களில் மீண்டு வந்தார். மேலும் துவக்கத்தில் அவருக்கு விக்கெட் கிடைக்காதபோது சோர்வடையாமல், நிதானமாக யோசித்து யுத்திகளை மாற்றி அமைத்து பந்துகளை வீசினார். விக்கெட்டுகளையும் எடுத்தார்.
கிருஷ்ணாவின் கரடுமுரடான விளிம்புகளை மெருகூட்டுவதற்கும் அவரை ஒரு போட்டியில் வென்றவராக்குவதற்கும் முக்கிய பங்கு வகித்தவர்களில் அவரது பயிற்சியாளர் செந்தில்நாதனும் ஒருவர். "கிருஷ்ணா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எம்ஆர்எஃப் பேஸ் அறக்கட்டளைக்கு வந்தபோது, அவருக்கு வேகம் இருந்தது. ஆனால் அவர் அதிகமாக தளர்வடைந்தார். இதன் விளைவாக அவர் பந்தை வலது கைக்குள் தள்ளினார். அவரது உடற்தகுதி, வலிமை மற்றும் முன் பின் கால் சீரமைப்பை சரியாகப் பெறுவதில் நாங்கள் பணியாற்றினோம். இது அவரது உடலை மேம்படுத்தியதோடு, மிகச் சிறந்த பந்து வீச்சாளராக மாறவும் உதவியது” என்று செந்தில்நாதன் கூறுகின்றார்.
கிருஷ்ணா நெருக்கடி வேளையிலும் அமைதி காப்பவராக இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் பாராட்டியிருந்தார். "ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவருக்கு அழுத்தம் அதிகமாக இருந்தாலும், அதை அவர் ஒருபோதும் வெளிக்காட்டவில்லை. மற்றும் ஆடுகளத்திற்கேற்ப எந்த வகையான யுத்தியைகளை கையாள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்" என்று க்ளென் மெக்ராத் கூறியுள்ளார்.
தனது மகனின் சாதனைகளை பெருமையுடன் திரும்பிப் பார்க்கும் முரளி, “நான் கிரிக்கெட் விளையாடியபோது, எங்களுக்கு இப்போது உள்ளது போன்ற வசதிகள் கிடைக்கவில்லை. சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடுவது என்பது மிகப்பெரியது. அவர் எதையாவது மனதில் நினைத்தால், அதை அடைய வேண்டும் என்கிற நோக்கம் அவரிடம் உள்ளது. மேலும் அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் நினைத்ததை சாதித்துள்ளார்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.