சிட்னியில் களமிறங்கும் வார்னர்: பதுங்கிப்  பாய காத்திருக்கும் அஸ்வின்

அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை ஈஸியா தம் சுழலில் சிக்க வைத்து விடுவார் . அதுவும் வார்னரை இதுவரை  9 முறை பெவிலியன் அனுப்பியுள்ளார்

warner returns, aswin lurks - சிட்னியில் களமிறங்கும் வார்னர்: பதுங்கிப் பாய காத்திருக்கும் அஸ்வின்

Cricket News In Tamil: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக கருதப்படும் டேவிட் வார்னர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வினின் சுழலில் சிக்குவாரா வார்னர்:

அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை ஈஸியா தம் சுழலில் சிக்க வைத்து விடுவார் . அதுவும் வார்னரை இதுவரை  9 முறை பெவிலியன் அனுப்பியுள்ளார். அதோடு  அதிக தடவை இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்தவர்களின் பட்டியலில், முதல் இடத்தில் இருந்த முத்தையா முரளிதரனை(191) முந்திச் சென்று  (192)  உலக சாதனைபடைத்துள்ளார்.

3வது டெஸ்ட் விளையாடும் சிட்னி  மைதானமோ சுழலுக்கே சாதகமாக இருக்கும். இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி இப்படி ஒரு விபரீத முடிவு எடுக்குமா என்பதில் சந்தேகம் தான் எழுகின்றது. டேவிட் வார்னருக்கு சுவாசிப்பதில் பிரச்னை இருந்ததால்  ஓய்வில் இருந்தார். அப்படி குணமடைந்து களம் இறங்கினாலும் அஸ்வின் மறுமுனையில் இருந்து அவருக்கு தொல்லை கொடுப்பார்.

இதுவரை  சுழற்பந்தில் வார்னர் கடந்து வந்த பாதை:

வார்னர், ஆஸ்திரேலிய அணியிலே மிக சிறந்த இடது கை பேட்ஸ்மேன். மூன்று பார்மெட்களிலும் மிக நுணுக்கமாக மட்டையை சுழற்றி பந்துகளை பறக்க விடுவார். ஆனால் சூழலில் மட்டும் கொஞ்சம் திணறுவார். அதுவும் அஸ்வின் பந்து வீச வந்தால் கொஞ்சம் அதிகமாகவே சிரமப்படுவார். அப்படித்தான் 2017-ம் ஆண்டு இந்தியாவில்  நடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் வார்னருக்கு நெருக்கடி கொடுத்து கொண்டிருந்தார்.வார்னர்  தன்னை கவர் செய்து கொண்டு பந்தை அட்டாக் செய்யவில்லை. அதோடு  உருப்படியாக ஒரு ஸ்வீப் ஷாட் கூட அடிக்க முயவில்லை. அதோடு என்ன செய்வதென்று அறியாமல் விழி பிதுங்கி நின்றார் வார்னர்.

அஸ்வின் எப்போதும் போலவே லெக் சைடடு ஸ்டம்ப்க்கு  பந்துகளை சுழல செய்தார். மற்றும்  வார்னரை பந்தை அடிக்க வெளியில் இழுத்தார். வார்னர் அஸ்வினை அட்டாக் செய்வதற்கான பிளானை மறந்து குழம்பி இருந்தார். அஸ்வின் லெக் சைடில் வீசிய பந்து சுழன்று ஸ்டம்ப்யை சாய்த்தது. இதை போலவே மற்றோரு போட்டியிலும் அஸ்வின் வைய்த்த பொறியில் வார்னர் சிக்கி வெளியேறினார்.

 

குழப்பத்திற்கு மேல் குழப்பம்

வார்னர் அஸ்வினிடம் மட்டடுமல்ல,  கடந்த காலங்களிலும்  சுழற் பந்துகளை கையாளுவதில் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.  2013 முதல் 2014 வரை நடந்த போட்டிகளில் 23 தடவை சதம் அடிக்க முடியாமல் வெளியேறியுள்ளார் .  2016 -ம் ஆண்டு  இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடர்களில் சுழற் பந்துகளில் மிகவும் தடுமாறியுள்ளார்.  இதனால் அவரின்  டெஸ்ட் போட்டிகளின்  சராசரி குறைந்து காணப்படுகின்றது. சுழற் பந்துகளுக்கு ஏற்ப முன்னரே பிளான் செய்து கொள்ளும் அவர், ஆடுகளத்தில் பந்துகளை சந்திக்கும் போது ஒரு வித குழம்பிய மன நிலையிலே அணுகுகின்றார்.

ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ட்ரெண்ட் உட்ஹில் வார்னரிடம் , ‘சுழற் பந்துகளை பொறுத்தவரை அட்டாக் செய்து ஆட வேண்டிய பந்துகளை அட்டாக் செய்தும், தடுத்து நிறுத்தி (டிபான்ட்) ஆட வேண்டிய பந்துகளை தடுத்து நிறுத்தியும் விளையாட வேண்டும்’ என அறிவுரை வழங்கி இருந்தார்.
வார்னர் ஆடுகளத்தில் பந்துகளை தடுத்து நிறுத்துவதிலும், அட்டாக் செய்து ஆடுவதிலும் கை தேர்ந்தவர். ஆனால் பந்துகளை சந்திக்கும் போது  குழப்பம் ஏற்பட்டு அவுட் ஆகி விடுகின்றார்.  ஸ்வீப் ஷாட் ஆட விரும்பும், அதை ஆடும்போது கோட்டை விடுகிறார். வார்னர் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று 2முறை
அஸ்வினிடம் விக்கெட்டை பறி கொடுத்துள்ளார்.
 சிட்னி மைதானம் இந்திய மைதானம் போல சுழலுக்கு ஒத்துழைக்காவிட்டாலும் அஸ்வின் வார்னருக்கு  நெருக்கடி  தர பல யுத்திகளை கையாள்வார். ஆனாலும் வார்னருக்கு இதை விட்டால் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காது. சொந்த மண்ணில் விளையாடும் போது சற்று பொறுமையாகவும் நுணுக்கமாகவும் விளையாடியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவரின்  பயிற்சியாளர் கூறியதை போல சுழற் பந்துகளுக்கான பிரத்தியோக யுத்திகளை கையாள்வாரா அல்லது அஸ்வினின் பொறியிலே மீண்டும் சிக்குவாரா என்பதை சற்று பொறுமையுடன் இருந்து தான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Cricket news in tamil warner returns aswin lurks

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com