Cricket news in tamil: இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் அகமதாபாத்தில் நடைபெற்று வந்த 3 வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு தாவியுள்ளது.
சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 69.7 சதவீத புள்ளிகளையும் (பி.சி.டி) 460 மொத்த புள்ளிகளையும் பெற்று நியூசிலாந்து அணிக்கு பின்னால் இரண்டாவது இடத்தில் இருந்தத்து. தற்போது அகமதாபாத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 71 பி.சி.டி.யுடன் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது. இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்தில் இங்கிலாந்து அணி இடம் பிடிக்க வாய்ப்பு சற்று குறைவாகத்தான் உள்ளது. இருந்தாலும் அந்த அணி வரும் ஜூன் மாதத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே அந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்பதில் சந்தேகம் தான் எழுகிறது. அதோடு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-ல் தோல்வியடைந்துள்ளது. அதனால் 64.1 சதவீத புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
69.2 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் ஆஸ்திரேலிய அணியை விட முன்னிலையில் இருக்க, இங்கிலாந்து அணியுடனான கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் அல்லது போட்டியை சமன் செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil