சாதிரீதியான விமர்சனம்: யுவராஜ் சிங் மீது வழக்குப் பதிவு

casteist remarks on indian cricketer Yuvraj Singh: பட்டியல் சமூகத்தினரை இழிவு படுத்தும் கருத்துக்களை தனது இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஹரியானா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Cricket news in tamil Yuvraj Singh named in FIR over ‘casteist remarks’

cricket news in tamil: கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், மற்றும் முன்னணி வீரர் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் மற்றொரு வீரர் குறித்து பேசுகையில் பட்டியல் சமூகத்தின் மனம் புண் படும் படியாக பேசியதாக வழக்கறிஞர் ரஜத் கல்சன் என்பவர் ஹன்ஸி நகர காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்நகர காவல்துறை முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

“முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் லைவ்வின் போது மற்றொரு வீரரைக் குறிப்பிடுகையில் பட்டியலின சமூகத்தினர் மனம் புண் படியாக பேசியுள்ளார். அதோடு இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர் .

எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153, 153ஏ, 295, 505 மற்றும் பட்டியலின பாதுகாப்புச் சட்டம் (SC/ST act) போன்ற சட்டங்களுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை விரைவில் கைது செய்யக்கோரி ஹிசார் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று வழக்கறிஞர் ரஜத் கல்சன் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket news in tamil yuvraj singh named in fir over casteist remarks

Next Story
விசில் போடு… சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்திய கோலி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com