'ஹர்டிக் பாண்டியாவால் தான் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடிக்க முடியும்' - யுவராஜ் சிங் நம்பிக்கை
Former indian cricketer Yuvraj Singh about Hardik Pandya Tamil News: முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், தன்னை போல் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடிக்க அதிரடி ஆட்டக்காரரான ஹர்டிக் பாண்டியாவால் மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Former indian cricketer Yuvraj Singh about Hardik Pandya Tamil News: முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், தன்னை போல் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடிக்க அதிரடி ஆட்டக்காரரான ஹர்டிக் பாண்டியாவால் மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Cricket news in tamil: இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். கடந்த 2003ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அடி வைத்த இவர் சர்வதேச போட்டிகளில் பல திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தனது அசாத்திய அதிரடியால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். தவிர, சர்வதேச தொடரிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவரின் சில சாதனைகள் இதுவரை எந்த இந்திய வீரளாலும் முறியடிக்கப்படாத ஒன்றாக உள்ளது.
Advertisment
அந்த வகையில், கடந்த 2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராடு வீசிய 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்து மிரள வைத்திருந்தார் யுவராஜ் சிங். இந்த சாதனையை உள்ளூர் கிரிக்கெட்டில் ரவிசாஸ்திரி ஏற்கனவே செய்திருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் எந்தவொரு இந்திய வீரரும் பதிவு செய்யவும் இல்லை, முறியடிக்கவும் இல்லை.
Advertisment
Advertisements
இருப்பினும், தற்போது இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர்கள் இந்த சாதனையை முறியடிக்க தொடர் முயற்சிகளை மேற்கொன்டு வருகின்றனர். ஆனால், இது குறித்து சமூக வலைத்தள பக்கங்களில் அவ்வப்போது கேள்வி எழுப்பி வரும் இணைய வாசிகள், 'இந்திய அணி சார்பாக யுவராஜ் சிங் மட்டுமே செய்துள்ள இந்த சாதனையை இப்போது உள்ள எந்த வீரர் முறியடிப்பார்' என்பது போன்ற கேள்விகளையும் முன் வைத்துள்ளனர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங், தன்னை போல் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடிக்க அதிரடி ஆட்டக்காரரான ஹர்டிக் பாண்டியாவால் மட்டுமே முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "சிக்சர்களை அடிக்கும் பலமும், பேட்டிங்கில் நுணுக்கமும் ஹர்டிக் பாண்டியாவிடம் இருப்பதால் நிச்சயம் அவர் இந்த சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் படைக்க முடியும்" என யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிரடி வீரரின் இந்த கருத்திற்கு பலர் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தாலும், தாங்கள் விரும்பும் வீரர்களையும் சமூக ஊடங்களில் டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர்.
சமீபகாலமாக தனது பேட்டிங்கில் பட்டை தீட்டி வரும் ஹார்டிக் பாண்டியா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை நிரூபித்தும் காட்டியுள்ளார். அதோடு, அதிரடியாக ஆடி சில சிக்ஸர்களை பறக்க விட்டு மூக்கு மேல் விரல் வைக்க செய்திருக்கிறார். எனவே அவரால் நிச்சம் இந்த சாதனையை நிகழ்த்த முடியும் என நம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“