scorecardresearch

கண் கலங்கிய ஜிம்பாப்வே வீரர்… கை கொடுத்த “Puma”…!

Zimbabwe cricket player Ryan burl gets PUMA sponsor after his tweet gone viral Tamil News: ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் (Ryan Burl) சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் இணைய பக்கங்களிலும், சமூக வலைதள பக்கங்களிலும் வைரலாகின.

Cricket news in tamil: Zimbabwe cricket player Ryan burl gets PUMA sponsor after his tweet gone viral

Cricket news in tamil: உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் வலம் வருகிறது. அத்தகைய இந்த விளையாட்டில் சர்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் ஒரு வீரர் தோன்றினாலே அவருக்கான ஸ்பான்சர் முதல் விளம்பர படங்கள் வரை வரிசை கட்டி விடுகின்றன. ஆனால் இது இந்தியா போன்ற பெரிய நாடுகளின் சார்பாக களமிறங்கும் வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனென்றால் கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) அந்தஸ்து அந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. மேலும் இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சியில் தங்கள் நிறுவனத்தின் பெயர் இடம் பெற வேண்டும் என பல்வேறு நிறுவனங்கள் முந்தியடித்து கொண்டிருக்கின்றன.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் பிசிசிஐ-க்கு நிகராக இல்லை என்றாலும், ஓரளவிற்கு அந்தஸ்து உள்ள வாரியங்களாவே தென்படுகின்றன. ஆனால் கென்யா, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வாரியங்கள் ஏழ்மையானதாகவே உள்ளன.

தவிர, இந்த நாடுகளின் சார்பாக களம் காணும் வீரர்களுக்கு சர்வதேச அளவில் பெரியதாக வெளிச்சமும் கிடைப்பதில்லை, அப்படி கிடைத்தாலும் சரியான ஸ்பான்சர்கள் கிடைப்பதில் கேள்வியே எழுகின்றது. மேலும் இது போன்ற நாடுகளின் அணிகளில் விளையாடும் வீரர்களின் எதிராக்காலமும் கேள்வியாகவே உள்ளது.

இது ஒரு புறம் இருக்க, ஜிம்பாப்வே வீரர் ரியான் பர்ல் (Ryan Burl) சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் இணைய பக்கங்களிலும், சமூக வலைதள பக்கங்களிலும் வைரலாகின.

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் நிலைமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய அந்த புகைப்படத்தில், அணி வீரர்களின் ஷுக்கள் சிதறி கிடக்கின்றன. படத்தின் கேப்ஷனில், “எங்களுக்கு ஸ்பான்ஸர் கிடைக்க ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா ? அப்படி நடந்தால் நாங்கள் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் தொடருக்கு பின்பு எங்கள் ஷூவை பசை வைத்து ஒட்டவேண்டிய அவசியம் இருக்காது” என்று ரியான் பர்ல் பதிவிட்டு இருந்தார்.

ரியான் பர்லின் உருக்கமான இந்த பதிவை கவனித்த ட்விட்டர் வாசிகள், ஷு வாங்கி தருவதாகவும், ஷு சைஸ் அனுப்புங்கள் என்றும் பதிவிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

இவர்களின் வரிசையில் வந்த உலகின் முன்னணி விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான ‘பூமா’ (Puma), “பசையை ஓரம் வைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது, நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கிறோம்” என்று பர்லின் ட்விட்டிற்கு ரிப்ளை கொடுத்தது.

இதனையடுத்து, உலகெங்கிலும் உள்ள ட்விட்டர் வாசிகளுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அடுத்த ட்விட்டில் நன்றி தெரிவித்த ரியான் பர்ல் “நான் பூமா (Puma) நிறுவனத்துடன் இணைகிறேன் என்பதை பெருமையாக அறிவிக்கிறேன். இதற்கு காரணம் ரசிகர்களான நீங்கள் தான், எனக்கு கடந்த 24 மணிநேரத்தில் அளித்த ஆதரவு தான். உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ரியானின் டிவீட்க்கு பிறகு பூமா (Puma) அளித்த ஆதரவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரும் தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர் ஜிம்பாப்வே அணியின் வீரர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil zimbabwe cricket player ryan burl gets puma sponsor after his tweet gone viral