கேமராக்கள் மெய்மறந்து பந்தை நோக்க சடாரென இடி சத்தம் – ஃபீல்டருக்கு வந்த சோதனை!

அந்த கொழு கொழு பீல்டர் பந்தைப் பார்த்தாரே ஒழிய அதை கவனிக்கவில்லை

பந்து கொஞ்சமும் மட்டு மரியாதை இல்லாமல், அதுபாட்டுக்கு சிக்ஸ் சென்று விழுந்தது

இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்தவை. உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து தான் இங்கிலாந்தின் பல ஜாம்பவான்கள் உருவாகியுள்ளனர் என்ற போதும், இங்கு அட்ராசிட்டிக்கு பஞ்சம் இருக்காது.

அப்படியொரு சம்பவம் தான் இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் நிகழ்ந்துள்ளது.

போட்டி ஒன்றில், பேட்ஸ்மேன் சிக்ஸ் அடிக்க முயல, அதை எல்லைக்கோட்டில் நின்றிருந்த ஃபீல்டர், எப்படியாவது கேட்ச்சாக்கும் முனைப்பில் பந்தைப் பார்த்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தார்.

கேமராக்களும், மெய்மறந்து பந்தை நோக்க, சடாரென்று ஒரு இடிச் சத்தம்.

நல்ல சதைப் பிடிப்பான, அந்த கொழு கொழு பீல்டர் பந்தைப் பார்த்தாரே ஒழிய, பவுண்டரில் லைனில் இருந்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை கவனிக்கவில்லை.

அவரது வெயிட்டுக்கு ஓடிய வேகத்தில், அந்த தடுப்பில் மோதி அப்படியே சரிந்தார். பந்து கொஞ்சமும் மட்டு மரியாதை இல்லாமல், அதுபாட்டுக்கு சிக்ஸ் சென்று விழுந்தது.

அந்த பீல்டரின் மைண்ட் வாய்ஸ் – இன்னைக்கு யார் மொகத்துல முழிச்சனோ!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cricket news latest cricket video cricket updates

Next Story
முன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express