Cricket news tamil: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது மற்றும் தொடரின் கடைசி போட்டி மகாராஷ்டிராவின் புனேயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமே இல்லை என்று கூறலாம்.
இந்திய அணியின் 329 ரன்களை சேஸிங் செய்த இங்கிலாந்து அணி, ஆட்டத்தின் துவக்கத்திலேயே அதன் முன்னணி வீரர்களை பறிகொடுத்தது. தொடர்ந்து அவர்களுக்கு பின்னர் களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல் போல் அந்த அணி சிக்கித் தவித்தது. கப்பலை கரைசேர்க்க வேண்டும் என போராடிய ‘சுட்டிக் குழந்தை’ சாம் கரனின் முயற்சியோ தோல்வியில் முடிந்தது. இருப்பினும், ஆறுதல் தரும் விதமாக அந்த சுட்டிக் குழந்தைக்கு ‘ஆட்ட நாயகன்’ விருது வழங்கப்பட்டது. அதோடு, தொடரில் சிக்கி பந்துகளை சிதறடித்து 219 ரன்கள் சேர்த்த அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோவுக்கு ‘தொடர் நாயகன்’ விருதும் கிடைத்தது.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த இந்திய அணி, அந்த அணியின் நட்சத்திர வீரர்களை தடுமாறச் செய்து ஆட்டமிழக்க செய்தது. அதே வேளையில், அவ்வப்போது கேட்ச்களை தவறவிட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. உதாரணமாக புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஹர்டிக் பாண்டியா வசம் கேட்ச் கொடுக்க, அந்த சிம்பிள் கேட்சை மிஸ் செய்தார் பாண்டியா.
— Aditya Das (@lodulalit001) March 28, 2021
இருப்பினும், நடராஜன் வீசிய 11வது ஓவரில் டீப் மிட்-விக்கெட் திசையில் அடித்த பென்ஸ்டோக்ஸ் ஷிகர் தாவன் வசம் கேட்ச் கொடுக்க, அதை லாவகமாக பிடித்து அசத்தினார். மேலும் கேட்ச் பிடித்த பிறகு தன் ஸ்டைலில் தொடையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதை கவனித்த பாண்டியா, தவானை கையெடுத்து கும்பிட்டு, தரையில் விழந்து வணங்கினார். இது இந்திய அணியினர் அனைவர்க்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நெகிழ்வான சம்பவத்தை பார்த்த ரசிகர்கள், அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஹர்டிக் பாண்டியாவின் இந்த செயலுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
#IndiavsEngland #INDvsENG #HardikPandya #natarajan ஹர்திக் பாண்டியா டூ நடராஜன்😂😜 pic.twitter.com/NSMF4H3wZA
— ஜெர்ரி🐀 (@Jerrykutty07) March 28, 2021
#IndiavsEngland #INDvsENG #HardikPandya #natarajan ஹர்திக் பாண்டியா டூ நடராஜன்😂😜 pic.twitter.com/NSMF4H3wZA
— ஜெர்ரி🐀 (@Jerrykutty07) March 28, 2021
Thank you shikhar dhawan 🔥🙏#INDvENG #HardikPandya #INDvsENG pic.twitter.com/m5YpWrP6gK
— Yuvraj Pratap Rao (@yuvrajuv444) March 28, 2021
@hardikpandya7 after @benstokes38 dismissal 😅✌🏻
— Nizaam Mohammed (@MohdNizaa) March 28, 2021
Tough guy tho💪🏻@Natarajan_91 🥳🥳🥳#HardikPandya #BenStokes #natarajan #INDvENG #INDvsENG pic.twitter.com/SjrQInnld0
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )