சோதனை மேல் சோதனை… 50 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்காத கேப்டன் கோலி!
Captain virat kohli latest Tamil News: சர்வதேச கிரிக்கெட்டில் தான் அறிமுகமான காலத்திலிருந்து தொடர்ச்சியாக சதம் விளாசி மிரட்டிய கேப்டன் கோலிக்கு இப்படி சோதனைக்கு மேல் சோதனையாக நடக்கிறது என அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Cricket news tamil: இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், ஹெட்டிங்க்லேயின் லீட்ஸ் மைதானத்தில் 3வது டெஸ்ட் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
Advertisment
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய களம் கண்ட நிலையில், தொடக்க வீரர் கேஎல் ராகுல் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வெளியேறவே தொடக்க வீரர் ரோகித் சர்மா (19) மற்றும் துணைக்கேப்டன் ரஹானே (18) சேர்த்த இரட்டை இலக்க ரன்களால் இந்திய அணி 78 ரன்கள் சேர்த்தது.
இந்த ஆட்டத்தில் புஜாராவின் விக்கெட்டுக்குப்பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இங்கிலாந்து எதிரான தொடரில் தொடர் சறுக்களை சந்தித்து வரும் கோலி, இந்த ஆட்டத்திலாவது தனது சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
கேப்டன் கோலி கடந்த 2019ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் கடைசியாக சதம் அடித்தார். அதன் பின்னர் நடந்த 50 போட்டிகளில் (18 டெஸ்ட், 15 ஒருநாள் மற்றும் 17 டி20) ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதனால் ஆழ்ந்த சோகத்தில் உள்ள அவரது ரசிகர்கள், சர்வதேச கிரிக்கெட்டில் தான் அறிமுகமான காலத்திலிருந்து தொடர்ச்சியாக சதம் விளாசி வரும் கேப்டன் கோலிக்கு இப்படி சோதனைக்கு மேல் சோதனையாக உள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளனர்.