worldcup 2023 | indian-cricket-team: சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடரில் களமாட ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. ஆடும் லெவன் அணியில் ஆழமான பேட்டிங் வரிசை வேண்டும் என அணி நிர்வாகம் ஆழ்ந்த யோசனையில் இருக்கும் நிலையில், லோ ஆடரில் உள்ள வீரர்களின் பேட்டிங் சராசரி கவலையளிக்கிறது.
அதிரடி ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜாவுக்குப் பின்னர் களமாடும் குல்தீப் யாதவின் சராசரி 10 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 56.29 ஆகவும் (34 இன்னிங்ஸ்) உள்ளது. 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ராவின் சராசரி 7.30 மற்றும் 56.15 ஸ்டிரைக் ரேட் ஆக உள்ளது. முகமது சிராஜின் சராசரி 6.16 மற்றும் SR 40.12 (13 இன்னிங்ஸ்), முகமது ஷமியின் சராசரி 8.40 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 85.71 (44 இன்னிங்ஸ்) ஆகவும் உள்ளது.
ஹர்திக் பாண்டியா நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதேபோல், ரவீந்திர ஜடேஜாவைப் பற்றி இதைச் சொல்ல முடியாது, இந்த ஆண்டு அவரது பேட்டிங் சராசரி 27 ஆக உள்ளது. இந்தியாவின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு அரை சதம் அடித்துள்ளனர். ஆனால் ஒருநாள் போட்டிகளின் முறையே 16.14 மற்றும் 17.31 சராசரி வைத்துள்ளனர்.
இன்றைய நெதர்லாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக அஸ்வின், தாக்கூர் மற்றும் குல்தீப் ஆகிய வீரர்கள் வலைப் பயிற்சியின் போது பேட்டிங் செய்தனர். இந்த வீரர்களும் இந்தியாவுக்கு தேவையான நேரத்தில் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அஸ்வின் இந்தியாவின் த்ரில் வெற்றிக்கு உதவினார் என்பது இங்கு குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“