இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியுடன் வேகமாக ஓடி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இறுதியில் யார் வேகமாக ஓடினார்கள் என்பதைப் பாருங்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் சஹஸ்புர் அலிநகரில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்தில், இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார். தான் பயிற்சி செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது வீட்டுக்கு அருகே இருக்கும் மைதானத்தில் தான் வளர்கும் செல்ல நாய்க்குட்டி ஜேக் உடன் கொஞ்சி விளையாடுகிறார். பின்னர், அந்த நாயுடன் வேகமாக ஓடி பயிற்சி செய்கிறார். நாயைவிட வேகமாக தொடர்ந்து ஓடுகிறார். ஆனால், இறுதியில் நாய் அவரைத் தாண்டி ஓடுகிறது.
இந்த வீடியோவைப் பற்றி ஷமி குறிப்பிடுகையில், ஸ்பீட் வொர்க் வித் ஜெக் என்று குறிப்பிட்டுள்ளார். முகமது ஷமி செல்ல நாய்க்குட்டி ஜேக் உடன் வேகமாக ஓடி பயிற்சி செய்யும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வீரர் ஷமி கொரொனா பொதுமுடக்க காலத்தில் பொது மக்களுக்கு உணவு, மளிகைப் பொருட்கள் உதவி செய்தார். அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.