Advertisment

லேட் பிக்-அப்: ரஞ்சியில் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தும் விஜய் சங்கர்

மகாராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது 6வது முதல் தர கிரிக்கெட் சதத்தை பதிவு செய்துள்ளார் தமிழக வீரர் விஜய் சங்கர்.

author-image
WebDesk
New Update
cricket Ranji Trophy tamil news; Vijay Shankar hundred for Tamil Nadu vs Maharashtra

Vijay Shankar raises his bat. (PTI)

Ranji Trophy 2022-23, Vijay Shankar tamil news: 88-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

Advertisment

இந்நிலையில், புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) தொடங்கிய ஆட்டத்தில் மகாராஷ்டிரா - தமிழ்நாடு அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா முதல் இன்னிங்சில் 446 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 195 ரன்களும், அசிம் காசி 88 ரன்களும் எடுத்தனர்.

தமிழ்நாடு அணி தரப்பில், சந்தீப் வாரியார் 3 விக்கெட்டுகளையும், லட்சுமிநாராயணன் விக்னேஷ் மற்றும் சாய் கிசோர் தலா 2 விக்கெட்டுகளையும், விஜய் சங்கர் மற்றும் அஸ்வின் கிறிஸ்ட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தமிழக அணி 404 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அரைசதம் விளாசிய தொடக்க வீரர் என் ஜெகதீசன் 77 ரன்களும், பிரதோஷ் பால் 84 ரன்களும் எடுத்தனர். சதம் விளாசிய விஜய் சங்கர் 107 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடி வரும் மகாராஷ்டிரா அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களை எடுத்துள்ளது. தமிழக அணி அந்த அணியை விட 146 ரன்கள் பின்தங்கிய நிலையில் உளள்து.

அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தும் விஜய் சங்கர்

இந்த ஆட்டத்தில் தமிழக அணியின் முன்னாள் கேப்டன் விஜய் சங்கர் சதம் விளாசி அசத்தினார். 214 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகளை ஓடவிட்டு 107 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தனது 6வது முதல் தர கிரிக்கெட் சதத்தை பதிவு செய்துள்ளார். முன்னதாக, இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக தனது சதத்தை பதிவு செய்து இருந்தார்.

publive-image

ஆனால், அவர் இந்த சதத்தை ஏறக்குறைய தனது முதல் சதம் போல் தான் உணர்ந்தார். ஏனென்றால், 2019 உலகக் கோப்பையின் போது தனது கால் விரலில் காயம் ஏற்பட்ட பின்னர், பல்வேறு காயங்கள் காரணமாக விஜய் சங்கர் தமிழ்நாடு அணியில் இருந்து விலகி இருந்தார். அவரது தொடையில் அடிக்கடி காயம் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் அவர் மீண்டும் திரும்பும்போது, ​​அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. மேலும் கடந்த ஐபிஎல்-ல், அவரது வலது தோள்பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

விஜய் சங்கர் ஆரம்பத்தில் குறைந்தது ஆறு மாதங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவரது மறுவாழ்வு சிறப்பாகச் சென்றது.ரஞ்சி டிராபிக்கான சரியான நேரத்தில், அவரது அட்டவணைக்கு முன்னதாகவே திரும்பினார்.

இந்நிலையில், தனது சிறப்பான கம்பேக் மற்றும் காயம் குறித்து விஜய் சங்கர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் பேசினார். அவை பேசியது பின்வருமாறு:-

“நீங்கள் கிரிக்கெட்டை உயர்மட்டத்தில் அனுபவித்தவுடன், நீங்கள் தொடர்ந்து வளர விரும்புவீர்கள். ஆனால் எனக்கு லிஃப்டில் மாட்டிக்கொண்டது போல் தான் இருந்தது. நிறைய கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது, ஆனால் காயம் காரணமாக ஒவ்வொரு ஆட்டத்தையும் நீங்கள் இழக்கிறீர்கள். இந்த ஆட்டத்தில் நான் மீண்டும் தொடங்குவது போல் உணர்கிறேன். அணி சிறப்பாக செயல்படுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் மீண்டும் செய்யவேன்.

இது கொஞ்சம் குறைவாக தோன்றலாம், ஆனால் காயமடைவதும், மறுவாழ்வு செய்வதும், மீண்டும் திரும்புவதும் எளிதானது அல்ல. நீங்கள் அதை ஒரு முறை செய்யலாம், ஆனால் நீங்கள் அதை மீண்டும் மீண்டும் செய்தால், அது உங்கள் மன உறுதியை சோதிக்கிறது. ஆனால் எப்படியோ, இந்த முறை எனது குடும்பத்தினருக்கு நன்றி, நான் நல்ல மனநிலையில் இருந்தேன், எனது மறுவாழ்வுக் காலத்தில் இரட்டிப்பு வேலைகளைச் செய்து முழுமையாக உடல்நிலைக்குத் திரும்ப முடிந்தது." என்று அவர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Maharashtra Sports Cricket Pune Vijay Shankar Ranji Trophy Tamilnadu Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment