Olympics | ipl-cricket: 34-வது ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் (இருபாலருக்கும் டி20), ஸ்குவாஷ், பேஸ்பால்-சாப்ட்பால் மற்றும் அமெரிக்காவில் புகழ்பெற்ற பிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய விளையாட்டுகளை புதிதாக சேர்க்க லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரைத்த நிலையில், அதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கிரிக்கெட் 1900-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் மட்டும் இடம் பெற்றது. அதில் இங்கிலாந்து அணி பிரான்சை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது. அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட் தற்போது 128 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கால்பதிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் அசுர வளர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனெனில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 2028ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள் போட்டி சேர்க்கப்பட்டு விட்டது.
எவ்வாறாயினும், விளையாட்டு அமைப்பாளர்களை தூண்டியது கிரிக்கெட்டில் இருந்து வரும் வருவாய் மட்டுமல்ல. போட்டி-நாளில் அரங்கேறும் ரசிகர்களின் ஆரவாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளின் தலையாய கலவையாக கிரிக்கெட் உள்ளது. காமன்வெல்த் நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் கிரிக்கெட் மிக நீண்ட போட்டியாகவும், மிக மெதுவாக மற்றும் மிகவும் சிக்கலானது போட்டி என்றும் கேலி செய்யப்பட்டது.
தற்போது ஐ.பி.எல் தொடரின் அடிச்சுவடுகளை பின்பற்றி ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவத்தின் எழுச்சியில் ஐ.பி.எல் லீக் வழங்கிய உந்துதல், கண்டங்கள் முழுவதும் உள்ள நாடுகள் தொடர்ந்து, கிரிக்கெட்டை ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என கருதின. முன்பு 50 ஓவர் வடிவத்தில் போட்டி விளையாடப்பட்டதால், அதனை தொடர்ந்து நடத்த முடியவில்லை.
தற்போது கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் மும்பை இந்தியன்ஸின் இணை உரிமையாளரான நீடா அம்பானியின் ஆலோசனையை ஐ.ஓ.சி நம்பியிருந்தது. அதன்பிறகு தான் சேர்க்கப்பட்டது. மேலும், லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டிகள் மற்றொரு ஐ.பி.எல் உரிமையான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தால் கட்டப்படும் மைதானத்தில் நடத்தப்படலாம்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான கேசி வாசர்மேன் 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல்-லை முதன் முதலாக நேரில் கண்டு கழித்தார். அடுத்த கணமே போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் பணியில் குதித்தார். "நாங்கள் அந்த சூழலை மீண்டும் உருவாக்க விரும்புகிறோம்" என்று அவர் நேற்றைய (ஐ.ஓ.சி. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "அந்த நிபுணத்துவம், அந்த புரிதல், அந்த அளவில் ஒரு போட்டியை எப்படி நடத்துவது, உலகின் தலைசிறந்த வீரர்களை ஈர்ப்பது எப்படி, அதை எப்படி உற்சாகமான சூழலாக மாற்றுவது என்பதை யோசித்தோம். மும்பையில் எனது முதல் ஐபிஎல் போட்டியை என்னால் மறக்கவே முடியாது. அது சிறப்பாக இருந்தது." என்று கூறினார்.
எனவே, 2017 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விளையாட்டுப் போட்டிகள் வழங்கப்பட்ட பிறகு, அவர்களின் பரிந்துரையின் பேரில் திட்டத்தில் சேர்க்கக்கூடிய 14 விளையாட்டுகளின் ஆரம்பப் பட்டியலில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது.
அந்தப் பட்டியல் ஒன்பது விளையாட்டுக்களாகக் குறைக்கப்பட்டது மற்றும் அவர்களின் திட்டங்களில் கிரிக்கெட் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்தது. "நாங்கள் செயல்முறைகளை கடந்து செல்லும்போது, நாங்கள் அதைச் சேர்க்கவில்லை என்றால் நாங்கள் தவறு செய்வோம் என்பது தெளிவாகத் தெரிந்தது.
எங்களது பேச்சுவார்த்தை ஆழமாகவும் நீண்டதாகவும் இருந்தது. அந்த செயல்பாட்டில் ஐ.சி.சி சிறப்பாக செயல்பட்டது. வெளிப்படையாக, ஐ.சி.சி, இந்தியா மற்றும் ஐ.பி.எல்-லில் உள்ள கிரிக்கெட் சமூகத்திடமிருந்து இருந்து நிறைய கற்றுக்கொள்ளப் போகிறோம்.”என்று அவர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Cricket’s return to Olympics based on success of IPL
இந்திய நிபுணத்துவம்
அமெரிக்க அமைப்பாளர்கள் ஐ.பி.எல் மற்றும் தொழில்முறை லீக்கின் தாக்கத்தை ஆய்வு செய்தபோது, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தலைவர் தாமஸ் பாக், உலக அமைப்பின் ஒரே இந்திய உறுப்பினரான நீதா அம்பானியின் ஆலோசனையை நம்பியதாகக் கூறினார்.
"சமீப ஆண்டுகளில் கிரிக்கெட் வளர்ச்சியடைந்து வருகிறது. நான் பார்ப்பது, நாம் அனைவரும் பார்ப்பது கிரிக்கெட்டின் சிறந்த வளர்ச்சியாகும், மேலும் இந்தியாவில் உள்ள எங்கள் ஐ.ஓ.சி உறுப்பினர் நீதா அம்பானி இதைப் பற்றி எப்பொழுதும் அறிந்திருக்கிறோம், அவர் நல்ல ஆலோசனைகளை வழங்கினார். லாஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பாட்டுக் குழுவுடன் நாங்கள் இந்த விவாதத்தை நடத்தினோம். அதனால் எல்லாம் ஒன்று சேர்ந்தது." என்றார்.
இத்தாலியின் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் நிக்கோலோ காம்ப்ரியானி, இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு இயக்குநராக இருக்கிறார். கடந்த ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளின் போது அதிக ஆர்வத்தை அவர் கண்டதாகக் கூறினார்.
மகளிர் பிரீமியர் லீக் மற்றும் பிற தொழில்முறை போட்டிகள், ஒரு 'தனித்துவமான தளத்தை வழங்கியது. "இந்த தொழில்முறை லீக்குகள் விளையாட்டு வீரர்களின் புதிய சமூகத்துடன் ஈடுபடுவதற்கான தனித்துவமான தளம். ஒரு விளையாட்டு வீரராக, இது வாழ்க்கையை மாற்றும்." என்று அவர் கூறினார்.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் திரும்புவது சில நிபந்தனைகளுடன் வருகிறது. ஒலிம்பிக் திட்டக் கமிஷனின் தலைவர் கார்ல் ஸ்டோஸ், பங்கேற்கும் நாடுகள் விளையாட்டுப் போட்டிகளில் 'தங்கள் சிறந்த வீரர்களை' களமிறக்குகின்றன என்பதை அவர்கள் 'உறுதியாக கண்காணிப்போம்' என்றார்.
ஐவரி கோஸ்ட்டின் ஐஓசி உறுப்பினர் டிட்ஜேன் தியாம், ஐஓசியால் அங்கீகரிக்கப்பட்ட 206 நாடுகளில் குறைந்தது 75 சதவீதத்திற்கு விளையாட்டு அதன் ஆடுகளத்தை அதிகரிக்க வேண்டும் என்றார். தற்போது, 'தேசிய கூட்டமைப்புகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே' கிரிக்கெட் விளையாடப்படுகிறது என்றும் தியாம் கூறினார்.
விளையாட்டு இந்த தடைகளை கடக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தலைவர் தாமஸ் பாக் நம்பிக்கை தெரிவித்தார். அது நடந்தால், கிரிக்கெட் ஒலிம்பிக்கிற்கு திரும்பும் போது, மேஜர் லீக் கிரிக்கெட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் உரிமையாளரான ஷாருக்கானுக்குச் சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் இணைந்து கட்டப்பட்ட அரங்கில் அது விளையாடப்படும்.
இந்த விஷயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களை அவர் ஏற்கனவே சந்தித்ததாகவும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான கேசி வாசர்மேன் கூறினார். "அங்குள்ள பாலிவுட் இணைப்பு எங்களுக்கு சக்திவாய்ந்ததாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. எனவே அவர்கள் ஒரு வசதியை உருவாக்க முடிந்தால், அவர்கள் கிரிக்கெட்டின் தொகுப்பாளராக இருக்க நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால் வெளிப்படையாக அது அவர்களின் பொறுப்பு. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மைதானம் என நான் நினைக்கிறேன். எனவே அது '28 க்குள் செயல்பாட்டுக்கு வந்தால், அது மிகவும் நல்லது. இல்லையெனில், எங்களுக்கு வேறு வழிகள் உள்ளன." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.