Advertisment

T20 World Cup 2024: புதிய ஜெர்சியில் இந்திய அணி வீரர்கள்

புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இப்போது வெளியாகி உள்ளன

author-image
WebDesk
New Update
T20 World Cup 2024

T20 World Cup 2024

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வரும் ஜூன் 1 முதல் 29-ம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்தியா உட்பட 20 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கிறது. மொத்தம் 55 போட்டிகள். குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று, நாக் அவுட் என போட்டிகள் நடைபெற உள்ளது.

Advertisment

இந்திய அணி குரூப்-ஏபிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அங்கம் வகிக்கிறது. இதற்காக சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

இதுவரை இந்திய அணியின் ஜெர்சி நீல நிறத்தில் இருந்து வந்த நிலையில், புதிய ஜெர்சியின் 2 கைகளிலும் காவி நிறம் இடம்பெற்றிருந்ததால், இது அப்போது விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இப்போது வெளியாகி உள்ளன.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment