IPL 2021, Ravichandran Ashwin Tamil News: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த 41-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 127 ரன்கள் மட்டுமே குவித்தது. தொடர்ந்து களம் கண்ட கொல்கத்தா அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் 19-வது ஓவரில் அஸ்வின் மற்றும் ரிஷப் பண்ட் இரண்டாவது ரன்-க்கு ஓடினர். பீல்டர் த்ரோ செய்த பந்து பேட்ஸ்மென் மீது பட்டு விலகி சென்றால் ரன் ஓடக் கூடாது என்ற எழுதப்படாத மரபு ஒன்று கிரிக்கெட்டில் உள்ளது. எனினும், அஷ்வின் ரிஷப் பண்ட்டை 2-வது ரன்னிற்கு அழைத்து அந்த ரன்னை ஓடி முடித்தார்.
அதன்பின்னர் டிம் சவுதி வீசிய 20-வது ஓவரின் முதல் பந்தில் அஷ்வின் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது டிம் சவுத்தி அஷ்வினை நோக்கி சில வார்த்தைகளை உதிர்த்தார். உடனே அவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியது. இதற்கிடையில் உள்ளே நுழைந்த கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் அஷ்வினை கடுமையான வார்த்தைகளை கொண்டு கடிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிக விவாதிக்கப்பட்டு வரும் இந்த விவகாரம் கடந்த 2 நாட்களாக இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் அதிகளவு பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. தவிர, இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் அஷ்வினை கடுமையான விமர்சித்து எழுதின.
இது தொடர்பாக அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே, "இந்த உலகம் இந்த டாபிக் மற்றும் அஸ்வின் ஆகியோரால் பிரியக் கூடாது. அஸ்வின் ஏன் இதுபோன்று மீண்டும் மீண்டும் செய்கிறார் ? என்பது புரியவில்லை. இயான் மோர்கன் அவரை கடிந்தது சரிதான்" என்று பதிவிட்டு இருந்தார்.
The world shouldn’t be divided on this topic and Ashwin. It’s pretty simple - it’s disgraceful & should never happen. Why does Ashwin have to be that guy again ? I think @Eoin16 had every right to nail him !!!! https://t.co/C2g5wYjeT6
— Shane Warne (@ShaneWarne) September 29, 2021
இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தன்னை விமச்சித்து வரும் நபர்களுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்கும் விதமாகவும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஸ்வின் தற்போது ட்வீட் செய்துள்ளார்.
1. I turned to run the moment I saw the fielder throw and dint know the ball had hit Rishabh.
2. Will I run if I see it!?
Of course I will and I am allowed to.
3. Am I a disgrace like Morgan said I was?
Of course NOT.— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) September 30, 2021
அவரின் ஆறுவது ட்வீட் பதிலில் அவர், "நான் சண்டை போட்டேனா? இல்லை. நான் எனக்காக எழுந்து நின்றேன். அதைத்தான் என் ஆசிரியர்களும் பெற்றோர்களும் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்கும் தங்களைத் தாங்களே எழுந்து நிற்கக் கற்றுக் கொடுங்கள்.
4. Did I fight?
No, I stood up for myself and that’s what my teachers and parents taught me to do and pls teach your children to stand up for themselves.
In Morgan or Southee’s world of cricket they can choose and stick to what they believe is right or wrong but do not have the— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) September 30, 2021
மோர்கன் அல்லது சவுதீயின் கிரிக்கெட் உலகில் அவர்கள் சரி அல்லது தவறு என்று நம்புவதைத் தேர்ந்தெடுத்து அதன் பக்கம் நின்று கொள்ளலாம். ஆனால் தார்மீக உயர்நிலையை எடுத்துக்கொள்ளவும் அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தவும் உரிமை இல்லை." என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.