Chetan Sharma, Shiv Sundar Das, Subroto Banerjee, Salil Ankola and Sridharan Sharath were appointed as the new members of the selection committee tamil news
News about BCCI, selection committee Chetan Sharma tamil news: ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 ஆண்டுக்கான டி20 உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து வெளியேறியது. இதனால், இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த நவம்பர் 18 அன்று சேத்தன் சர்மா தலைமயிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டது.
Advertisment
தொடர்ந்து புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேற்கொண்டது. அதன்படி, புதிய தேர்வு குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை குழு நியமிக்கப்பட்டது. அசோக் மல்கோத்ரா, ஜக்னி பரண்ஜோ, சுலக்சனா நாயக் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
புதிய தேர்வுக்குழுக்கான நேர்காணல் மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், கிரிக்கெட் ஆலோசனை குழு சேத்தன் சர்மாவையே மீண்டும் தேர்வு குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. மற்ற உறுப்பினர்களாக ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா மற்றும் ஸ்ரீதரன் ஷரத் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளனர்.
Advertisment
Advertisements
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுலக்ஷனா நாயக், அசோக் மல்கோத்ரா மற்றும் ஜக்னி பரண்ஜோ ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) அகில இந்திய மூத்த தேர்வுக் குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விரிவான செயல்முறையை மேற்கொண்டது. 18 நவம்பர் 2022 அன்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஐந்து பதவிகளுக்கான விளம்பரத்தைத் தொடர்ந்து வாரியம் சுமார் 600 விண்ணப்பங்களைப் பெற்றது.
சரியான ஆலோசனை மற்றும் கவனமாக பரிசீலிக்கப்பட்ட பிறகு, கிரிக்கெட் ஆலோசனைக் குழு தனிப்பட்ட நேர்காணல்களுக்கு 11 நபர்களை பட்டியலிட்டது. நேர்காணல்களின் அடிப்படையில், மூத்த ஆண்கள் தேசிய தேர்வுக் குழுவிற்கு பின்வரும் வேட்பாளர்களை குழு பரிந்துரைத்துள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
NEWS 🚨- BCCI announces All-India Senior Men Selection Committee appointments.
Mr Chetan Sharma recommended for the role of Chairman of the senior men’s selection committee.